நெகட்டிவ் ரோலில் நடிக்க ரொம்ப நாளா ஆசை – சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண்!

Harish Kalyan

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. பார்க்கிங் படத்தை அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்திற்கு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு, படத்தின் ரன்டைம் 2 மணி 8 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிக்கும், இப்படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், ராம ராஜேந்திரன், இளவரசு ஆகியோரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழு ப்ரோமோஷன் பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பார்க்கிங்’ பட செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தற்கு படக்குழுவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு படத்தை போட்டு காமித்து பாசிடிவ் விமர்சனம் கொடுத்ததாகவும் பகிர்ந்து கொண்டார். 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் அந்த இருவர் இவர்கள்தான்!

மேலும் அவர் பேசுகையில், படத்தில் நடித்த கதாபாத்திரம் குறித்து பேசுகையில், “நெகட்டிவ் ரோல்ல நடிக்கனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசை. அது போல் தமிழ் சினிமா ரஜினி சார், கமல் சார் என்று விஜய் மற்றும் அஜித் சார் என என அனைவரது மனதிலும் ஒரு வில்லத்தனம் இருக்கும். அது போல், எனக்கும் நெகட்டிவ் ரோலில் நடிக்கணும் ஆசை. இந்த படத்தில் என்னோட வில்லத்தனம், எம்.எஸ்.பாஸ்கர் சாருடைய வில்லத்தனம் இருக்கும்” என்றார்.

11 பசங்க நான் மட்டும் ஒரே வீட்டில் தங்கி இருந்தேன்! பூர்ணிமா சொன்ன அனுபவ கதை!

இதுவரை சாக்லேட் பாயாக காதல் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வந்த ஹரிஷ் கல்யாண், இந்த படத்தில் சிறிய வில்லத்தனத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளது எதிர்பார்ப்பை உண்டாக்க்கியுள்ளது. 

பார்க்கிங்

2 கேரக்டர்களுக்கு நடுவே நடக்கும் ஈகோ சண்டை தான் கதை. படத்தின் கதைப்படி, திருச்சியைச் சேர்ந்த ஹரிஷ் கல்யாண் தகவல் தொழில்நுட்ப வல்லுநராக அவர் தனது மனைவியுடன் (இந்துஜா) சென்னையில் குடியேறுகிறார். அவர் ஒரு புத்தம் புதிய காரை வாங்கி வாடகை வீட்டில் வசிக்கும் அவர், அவரது வீட்டு உரிமையாளருடன் (எம்.எஸ். பாஸ்கர்) யார் பார்க்கிங் இடத்தைப் பெறுவது என்பதில் சண்டை தொடங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்