சினிமா

கூல் சுரேஷ் கேட்ட அந்த கேள்வி! சிரித்து கொண்டே நழுவிய ஹரிஷ் கல்யாண்!

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சி விறு விறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிலையில், ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷனுக்காக வீட்டிற்குள் சென்று இருக்கிறார். அவர் நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக தான் ஹரிஷ் கல்யாண் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உள்ளே நுழைந்த ஹரிஷ் கல்யானுக்கும் போட்டியாளர்களும் டாஸ்க் ஒன்றும் கொடுக்கப்பட்டது.  அந்த டாஸ்க் என்னவென்றால், பிரபலங்களை பிக் பாஸ் போட்டியாளர்கள் பேட்டி எடுக்கவேண்டும் அவரிடம் எதாவது கேள்வி கேட்கவேண்டும்.

அப்படி ஹரிஷ் கல்யாணிடம் அர்ச்சனா – முதல் நாள் முதல் காட்சி படப்பிடிப்பின் போது எப்படி உணர்ந்தீர்கள்?விஷ்ணு – பிபி ஹவுஸிலிருந்து வெளியே சென்றவுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெறுவது எப்படி?விஜய் – குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் உள்ளதா?என தங்களுடைய கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு ஹரிஷ் கல்யானும் பதில் கூறினார்.

மூன்று ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடித்த அசோக் செல்வன்! மனைவி கீர்த்தி பாண்டியன் ரியாக்சன்?

இவர்கள் கேட்டதை விட கூல் சுரேஷ் கேட்ட கேள்வி ஹரிஷ் கல்யாண் மட்டுமின்றி பிக் பாஸ் போட்டியாளர்களையும் சிரிக்க வைத்தது. அப்படி என்ன கேள்விகள் எல்லாம் கேட்டார் என்றால் நீங்கள் பணியாற்றிய மிக மோசமான இயக்குனர்/கதாநாயகி யார்? என்றும் சிந்து சமவெளி படத்தில் நடிப்பது எப்படி இருந்தது? என்றும் கேட்டார்.

இதில் முதல் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் ஹரிஷ் கல்யாண் அப்படியெல்லாம் யாரும் இல்லை என பதில் கூறி மறுத்துவிட்டார். அடுத்ததாக சிந்து சமவெளி குறித்த கேள்விக்கு பதில் அளிக்கவே சிரித்து கொண்டு அப்டியே நழுவினார். இதனை பார்த்த மற்ற போட்டியாளர்களும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். ஏனென்றால், சிந்து சமவெளி படத்தில் அமலா பால் உடன் நடிகை ஹரிஷ் கல்யாண் நடித்திருப்பார்.

அதன் பிறகு பேசிய ஹரிஷ் கல்யாண் ” இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு பல விஷயங்களை கற்று கொடுத்து இருக்கிறது. இந்த வீட்டில் நான் வெளியே சென்ற பிறகு தான் எனக்கு பட வாய்ப்புகள் வந்தது. என்னுடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதும் இந்த பிக் பாஸ் வீடு தான். என்றும் நான் இந்த பிக் பாஸ் வீட்டை மறக்க மாட்டேன்” எனவும் நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

6 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

8 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

9 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

9 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

10 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

10 hours ago