pradeep antony harish kalyan [File Image]
பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோடி கணக்கான இதயங்களை வென்றுள்ளவர் பிரதீப் ஆண்டனி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசியதால் விளையாட்டு என்று வரும் போது தான் ஒரு கடுமையான போட்டியாளர் என்பதனை காட்டும் வகையிலும், விளையாடினார். ஆனால், இவர் மீது குற்றச்சாட்டி எழுந்த காரணத்தால் பிக் பாஸ் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது.
இதற்கு முன்னாடி நடந்த சீசன்களில் எல்லாம் இப்படி நடந்தது கூட இல்லை. ஆனால் பிரதீப் ஆண்டனி விவகாரத்தில் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து அவர் செய்த தவறுகளை திருத்திவிட்டு அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் அப்படி செய்யாமல் அவருக்கு ரெட் கார்டு கொடுத்தது மிகவும் தவறு என பலரும் கூறி வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான ஹரிஷ் கல்யாண் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பிரதீப் தான் பிக் பாஸ் வின்னர் என்பது போல பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி எதாவது பண்ணுவது தான். ரசிகர்கள் விரும்பும் எதாவது விஷயத்தை செய்தால் அந்த போட்டியாளரை மக்களுக்கு பிடிக்கும்.
ஒரே படத்தில் இணையும் சிம்பு- தனுஷ்? ரொம்ப பயங்கரமான சர்ப்ரைஸா இருக்கே!
உள்ளே சண்டை போட்டுக்கொண்டாலும் வெளியே யாரை பிடித்திருகிறது என்ற விஷயம் ஒன்று இருக்கிறது. அதில் பிரதீப் ஆண்டனி நிறைய ரசிகர்களை பெற்று கொண்டதாக நான் நினைக்கிறன். அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தாலும் அவருக்கான வரவேற்பு அவருக்கு சரியாக கிடைத்திருக்கிறது. ஏனென்றால் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் படங்களை இயக்குவது தான் தனக்கு ஆசை என்று கூறியிருந்தார்.
எனவே, அவர் வைத்திருக்கும் அந்த கதைக்கு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டது என்றால் அவர் தன்னுடைய வாழ்க்கையில் வெற்றியடைந்துவிடுவார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக ஹரிஷ் கல்யாண் பேசியுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…