சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற ‘லப்பர் பந்து’.. இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹரிஷ் கல்யாண்.!
இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து லப்பர் பந்து படக்குழு வாழ்த்து பெற்றனர். அப்போது, நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சென்னை : தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள “லப்பர் பந்து” திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையும் ஈட்டிய இப்படம் திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக படத்தின் முன்னணி நடிகர்கள் சில முக்கிய திரைப் பிரபலங்களை சந்தித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சமீபத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டிற்கு சென்ற படக்குழு படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொண்டது. படத்தில் இளையராஜாவின் இசையமைத்த “நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்” பாடலை பயன்படுத்தியுள்ளனர். அதனால், இசையமைப்பாளரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
முன்னதாக, மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து விஜயகாந்தின் தீவிர ரசிகன் என்பதால், இந்த படத்தில் வீட்டின் சுவரில் கேப்டன் சித்திரம், பைக்கில் கேப்டன் ஸ்டிக்கர் என பட நெடுக கேப்டன் விஜயகாந்தை நினைவூட்டியுளார்.
தற்பொழுது, இயக்குனர் பாரதிராஜாவை லப்பர் பந்து படக்குழு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதாவது, படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவிற்கு தங்கச் சங்கிலி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு 3 பவுன் தங்கச் சங்கலியை பரிசளித்த நடிகர் ஹரிஷ் கல்யாண்!
Thankful @tamizh018 bro????????
Proud of you @iamharishkalyan ❤️#LubberPandhu #WeLoveHarishKalyan #HarishKalyan pic.twitter.com/hSg7lVoWcl— Harish ma (@Harishma_) October 3, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025