கடின முயற்சி…பயங்கரமான காயங்கள்.! மிரள வைக்கும் ‘விடுதலை ‘ மேக்கிங் வீடியோ.!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை- 1திரைப்படம் வரும் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படக்குழு விடுதலை திரைப்படத்தின் மிரள வைக்கும் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
Director #VetriMaaran ‘s #ViduthalaiPart1 Making video
▶️ https://t.co/kMfu5phNbg#ViduthalaiPart1FromMarch31@ilaiyaraaja Musical@VijaySethuOffl @sooriofficial@elredkumar @rsinfotainment
— Kolly Buzz (@KollyBuzz) March 27, 2023
வீடியோவில் ” நடிகர் சூரி இதுவரை அவர் நடித்த எந்த படத்திற்கு எடுக்காத அளவிற்கு கடின முயற்சி எடுத்திருப்பது தெரிகிறது. ஒரு காட்சியில் வீட்டின் மேல் நின்று கொண்டு வேகமாக ஜம்ப் செய்கிறார். இதனால் அவருக்கு காயமும் ஏற்படுகிறது. அந்த கட்சியை பார்த்த பலரும் சூரியை பாராட்டி படம் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதைப்போல படத்திற்காக படக்குழுவினரும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்பது வீடியோவை பார்கையில் தெரிகிறது.
Some scary falls. I’m sure some injuries sustained. @sooriofficial has really given it his all for #ViduthalaiPart1 ????
— Haricharan Pudipeddi (@pudiharicharan) March 27, 2023
ஏற்கனவே படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டது. மேலும் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் 2-வது பாகமும் வரும் செம்டம்பர் மாதம் வெளியாக வெளியாகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.