“தளபதி 67″படத்தை அலேக்காக தூக்கிய சன்டிவி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 67 -வது திரைப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். தற்காலிமாக தளபதி 67 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ்உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தளபதி 67 படத்தை தயாரிக்கும் 7 ஸ்க்ரீன் நிறுவனம் தொடர்ந்து படத்திற்கான அப்டேட்டை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், கடைசியாக நேற்று படத்தின் பூஜை வீடியோவை வெளியீட்டு இருந்தார்கள். அதனை தொடர்ந்து தற்போது படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய தொலைக்காட்சி குறித்த அறிவிப்பை வெளியீட்டுள்ளது.
Andha saththam…
Indhiya tholaikaaatchigalil mudhal muraiyaaaga ????Happy to announce that @SunTV is the satellite partner of #Thalapathy67 ????#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss pic.twitter.com/Qhyzy6m4pk
— Seven Screen Studio (@7screenstudio) February 2, 2023
அதன்படி, தளபதி 67 படம் திரையரங்குகளில் வெளியானதற்கு பிறகு படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே சன் தொலைக்காட்சி விஜயின் பல ஹிட் படங்களை வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.