Rajinikanth dhanush [file image]
இன்று தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 73ஆவது பிறந்தநாள். ரஜினியின் சினிமா பயணத்தை சற்று பின்னோக்கி பார்த்தால், பஸ் கண்டக்டராக இருந்த அவர், சினிமா கனவுடன் சென்னைக்கு வந்து, 1975-ல் ‘அபூர்வ ராகங்களில்’ தொடங்கிய ரஜினியின் திரைப்பயணம், நிக்காமல் 70 வயதை கடந்தும் ரயில் போல் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், அவரது 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கமல், குஷ்பூ, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து உள்ளனர்.
அந்த வரிசையில், தற்பொழுது நடிகர் தனுஷ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது X தள பக்கத்தில், “ஆப்பி பர்த்டே தலைவா” என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ரஜினி பிறந்த நாள் அன்று தனுஷ் தனது வாழ்த்தை தவறாமல் கூறி வருவது வழக்கம். இது தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்களையும் குஷி படுத்திருக்கிறது.
அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து – கமல்ஹாசன்!
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் பட வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்கு படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட உள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…