ஹேப்பி பர்த்டே புஷ்பா…மகளுடன் அல்லு அர்ஜுனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த வார்னர்.! வைரலாகும் வீடியோ.!
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக்கொடுத்தது என்றே கூறலாம். இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இன்று நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள்.!#Dinasuvadu | #HBDAlluArjun | #AlluArjun | #HappyBirthdayAlluArjun pic.twitter.com/Xgo5tmbzmp
— Dinasuvadu (@Dinasuvadu) April 8, 2023
அந்த வகையில் அஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அல்லு அர்ஜுனுக்கு பிறந்த நாள் வலது தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் பிரவுன் கலர் டிசர்ட் அணிந்து கொண்டு புஷ்பா பாணியில் அல்லு அர்ஜுனை வாழ்த்தினார். புஷ்பாவின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார். தலைப்பில், “பெரிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அல்லு அர்ஜுனின் விருப்பமான #புஷ்பா” என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
டேவிட் வார்னர் அல்லு அர்ஜுனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவில் வார்னரின் மகளும் இருந்தார். அவரும் ஹேப்பி பர்த்டே புஷ்பா என கியூட்டாக கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Pushpa2TheRule Begins!!! pic.twitter.com/FH3ccxGHb8
— Allu Arjun (@alluarjun) April 7, 2023
மேலும் இன்று அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் புத்தம் புதிய போஸ்டரை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தளித்தார். போஸ்டரில், அனைத்து அர்ஜுனும் புடவை அணிந்திருப்பதைக் காணலாம் மற்றும் அவரது முகம் நீலம் மற்றும் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ளது. அவர் அந்த இடுகைக்கு தலைப்பிட்டார்: “புஷ்பா 2 ஆட்சி தொடங்குகிறது.”