காளி, கபாலி, காலா, கபிலன்களை நம்மில் விதைத்த இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

Default Image

தமிழ் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

2015ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டகத்தி எனும் திரைப்படம் வெளியானது. அன்றைய தினம் கோலிவுட்டில் பா.ரஞ்சித் எனும் அறிமுக இயக்குனர் அட்டகத்தி படத்திலிருந்து தனது கருத்துகளை சுதந்திரமாக விதைக்க தயாராகினார்.

படம் பார்த்த பெரும்பாலானோர் மெட்ராஸ் படத்தில் இருந்துதான் தனது கருத்துக்களை ஆணித்தனமாக பா.ரஞ்சித் திரைப்படங்களில் வெளிக்காட்ட தொடங்கினார் என்பார்கள். ஆனால், தனது முதல் பட முதல் நாள் ஷூட்டிங்கிலேயே நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்க காத்திருந்த படக்குழுவினருக்கு மத்தியில் அதிகாலையிலே முதல் ஷாட் எடுத்து முடித்து அங்கிருந்தே பல தடைகளை தகர்க்க தொடங்கினார் இயக்குனர் பா.ரஞ்சித்.

இன்றளவும் ரசிகர்கள் திரை விமர்சகர்கள் மத்தியில் பேசப்படும் பா.ரஞ்சித் இயக்கிய படம் என்றால் அது மெட்ராஸ் தான். அதனை காபாலி, காலா என சூப்பர் ஸ்டார் படங்கள் கூட நெருங்க முடியவில்லை. கடைசியாக வெளியான சர்பட்டா பரம்பரை அவரது இயக்கத்தில் சிறந்த படம் என்றாலும்,

மெட்ராஸ் பேசிய அரசியலை ரஞ்சித்தின் வேறு எந்த படங்களும் அவ்வளவு எளிதாக அனைவருக்கும் புரியும் புடிக்கும் வண்ணம் பேசியதில்லை என்பதே உண்மை.

நல்ல திறமையான தைரியமான இயக்குனர் பா.ரஞ்சித் என்பதையும் தாண்டி, நல்ல தயாரிப்பாளர் பா.ரஞ்சித், திறமையான அறிமுக இயக்குனர்களுக்கு நல்ல வாய்ப்பையும் வழங்கி வருகிறார். பரியேறும் பெறுமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு அடுத்து திரைக்கு தயாராகியுள்ள ரைட்டர் என அவர் தயாரிக்கும் படங்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

 

 

தமிழ் சினிமாவையும் தாண்டி, நல்ல படைப்பாளியாக தொடர்ந்து திரையுலகில் பணியாற்ற பயணிக்க இருக்கும் பா.ரஞ்சித்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அவரது இயக்கத்தில் அடுத்ததாக நட்சத்திரங்கள் நகர்கின்றன திரைப்படமும், விக்ரமின் 61வது திரைப்படமும் தயாராக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்