நடிகை ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தனது காதலரும், தொழிலதிபருமான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் இருக்கும் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களது, திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.
unknown nodeHansikaMotwani Wedding [Image Source: Twitter ]
ஒரு சில முக்கியமான பிரபலங்கள் மட்டுமே வருகை தந்தனர். திருமணத்தில் ஹன்சிகா விலை உயர்ந்த சிவப்பு கலர் லெஹங்காவும் உடம்பு முழுக்க தங்க நகைகள் அணிந்திருந்தார். திருமணத்திற்கான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
unknown nodeHansikaMotwani Wedding [Image Source: Twitter ]
இதனை தொடர்ந்து, தற்போது நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் முடிந்த புகைப்படங்களை வெளியீட்டு ” இப்பொழுதும் & எப்பொழுதும்” என எமோஷனைகளாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
unknown nodeமேலும் திருமணத்தை தொடர்ந்தும் ஹன்சிகா படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படி இவர் தமிழில் 4 படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.