சினிமா

மக்கள் ரசிக்காங்க அதான் அப்படி பட்ட படங்களில் இறங்கிட்டேன்! ஹன்சிகா ஓபன் டாக்!

Published by
பால முருகன்

திருமணம் முடிந்த பிறகும் நடிகை ஹன்சிகா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக இவர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் காந்தாரி தெலுங்கில் மை நேம் இஸ் ஸ்ருதி என த்ரில்லர் படங்களில் நடித்து இருக்கிறார். இதில் “மை நேம் இஸ் ஸ்ருதி” திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நவம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதனையடுத்து, படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை ஹன்சிகா  பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் எதற்காக தொடர்ச்சியாக த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த ஹன்சிகா ” மக்கள் இப்போது அந்த மாதிரி படங்களை பார்க்க தான் விரும்புகிறார்கள்.
நான் வேண்டுமென்றே அப்படி பட்ட கதைகளை தேர்வு செய்து நடிக்கவில்லை என்னிடம் வரும் கதையும் அந்த மாதிரி கதையம்சம் கொண்ட படமாக வருகிறது. கதையும் கேட்டவுடன் மிகவும் பிடிக்கிறது. அதனால் அப்படி பட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். ரசிகர்கள் என்னிடம் இருந்து அந்த மாதிரி படங்களை தான் விரும்புகிறார்கள். எனவே, தமிழ் மொழி மட்டுமின்றி த்ரில்லர் கதையம்சத்தை வைத்து எந்த நல்ல படம் என்னிடம் வந்தாலும் நான் நடிப்பேன்” என ஹன்சிகா கூறியுள்ளார்.
மேலும், “மை நேம் இஸ் ஸ்ருதி” திரைப்படம் குறித்து பேசிய ஹன்சிகா ” மை நேம் இஸ் ஸ்ருதி படம் என்னுடைய வாழ்க்கையில் ஒரு சிறந்த படமாக இருக்கும். ஏனென்றால், மாஃபியாவின் அச்சுறுத்தலைப் பற்றிய டார்க் த்ரில்லர் அம்சத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்படும் என நான் நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்பது மட்டுமின்றி பார்ப்பவர்களை சிந்திக்க வைக்கும்” எனவும் கூறியுள்ளார்.
இந்த ‘மை நேம் இஸ் ஸ்ருதி’  திரைப்படத்தை ஸ்ரீனிவாஸ் ஓம்கார் இயக்கியுள்ளார். படத்தில் முரளி சர்மா, பூஜா ராமச்சந்திரன், பிரேமா, ஜெய பிரகாஷ், ஆடுகளம் நரேன், ராஜா ரவீந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து நடித்துள்ளார்கள். இன்று வெளியான இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

6 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

6 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

8 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

8 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

11 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

11 hours ago