மக்கள் ரசிக்காங்க அதான் அப்படி பட்ட படங்களில் இறங்கிட்டேன்! ஹன்சிகா ஓபன் டாக்!

திருமணம் முடிந்த பிறகும் நடிகை ஹன்சிகா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக இவர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் காந்தாரி தெலுங்கில் மை நேம் இஸ் ஸ்ருதி என த்ரில்லர் படங்களில் நடித்து இருக்கிறார். இதில் “மை நேம் இஸ் ஸ்ருதி” திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நவம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதனையடுத்து, படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை ஹன்சிகா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் எதற்காக தொடர்ச்சியாக த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த ஹன்சிகா ” மக்கள் இப்போது அந்த மாதிரி படங்களை பார்க்க தான் விரும்புகிறார்கள்.
நான் வேண்டுமென்றே அப்படி பட்ட கதைகளை தேர்வு செய்து நடிக்கவில்லை என்னிடம் வரும் கதையும் அந்த மாதிரி கதையம்சம் கொண்ட படமாக வருகிறது. கதையும் கேட்டவுடன் மிகவும் பிடிக்கிறது. அதனால் அப்படி பட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். ரசிகர்கள் என்னிடம் இருந்து அந்த மாதிரி படங்களை தான் விரும்புகிறார்கள். எனவே, தமிழ் மொழி மட்டுமின்றி த்ரில்லர் கதையம்சத்தை வைத்து எந்த நல்ல படம் என்னிடம் வந்தாலும் நான் நடிப்பேன்” என ஹன்சிகா கூறியுள்ளார்.
மேலும், “மை நேம் இஸ் ஸ்ருதி” திரைப்படம் குறித்து பேசிய ஹன்சிகா ” மை நேம் இஸ் ஸ்ருதி படம் என்னுடைய வாழ்க்கையில் ஒரு சிறந்த படமாக இருக்கும். ஏனென்றால், மாஃபியாவின் அச்சுறுத்தலைப் பற்றிய டார்க் த்ரில்லர் அம்சத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்படும் என நான் நம்புகிறேன். இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்பது மட்டுமின்றி பார்ப்பவர்களை சிந்திக்க வைக்கும்” எனவும் கூறியுள்ளார்.
இந்த ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ திரைப்படத்தை ஸ்ரீனிவாஸ் ஓம்கார் இயக்கியுள்ளார். படத்தில் முரளி சர்மா, பூஜா ராமச்சந்திரன், பிரேமா, ஜெய பிரகாஷ், ஆடுகளம் நரேன், ராஜா ரவீந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து நடித்துள்ளார்கள். இன்று வெளியான இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025