hansika motwani [File Image]
நடிகை ஹன்சிகா கடைசியாக பார்ட்னர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுத்திருந்த நிலையில், அடுத்ததாக இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். அந்த வகையில், தெலுங்கில் ஸ்ரீனிவாஸ் ஓம்கார் இயக்கத்தில் அவர் நடித்த ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ படம் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி வெளியானது.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கும், ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கும் நடிகை ஹன்சிகா மனம் திறந்து தனது நன்றியை தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது.
என்னது தளபதி 68 கதை சிம்புவுக்கு எழுதப்பட்டதா? இது ரொம்ப புதுசா இருக்கு!
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஹன்சிகா ” ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ படத்திற்கு கிடைத்து வரும் ஆதரவை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருவதை பார்க்கும்போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்துக்காக தயாரிப்பாளரும் இயக்குனரும் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
இது ஒரு உண்மையான பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இந்த படத்திற்காக நாங்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் வரவேற்பு மறக்க வைத்துள்ளது. இப்படி ஒரு நல்ல படத்தை எடுத்த இயக்குனருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் அவருடைய இயக்கத்தில் படங்களில் நடிக்க ஆசை படுகிறேன்” எனவும் நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகை ஹன்சிகா தற்போது மை நேம் இஸ் ஸ்ருதி படத்தின் வெற்றியை தொடர்ந்து,காந்தாரி, ரவுடி பேபி, கார்டியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு முடிந்து படத்திற்கான போஸ்ட் ப்ரோடோக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…