hansika motwani sad [file image]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஹன்ஷிகா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் இணைந்தார். திருமணம் செய்துகொண்டாலும் சினிமா மீது இருக்கும் ஆர்வம் காரணமாக திருமணம் முடிந்ததை தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க ஹன்ஷிகாவின் தனிப்பட்ட வாழ்கை பற்றி சில செய்திகளும் அடிக்கடி உலாவி கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மாதங்களுக்கு முன்பில்லை ஹன்சிகா 16 வயதில் ஹார்மோன் ஊசி போட்டதாக பல செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு நான் அப்படி எல்லாம் ஊசி போடவில்லை என ஹன்ஷிகாவும் விளக்கம் கொடுத்து இருந்தார்.
இந்த சாச்சை அந்த சமயமே முடிவடைந்துவிட்டது. இருந்தாலும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஹன்சிகா பேசியுள்ளார். இது குறித்து பேசிய ஹன்ஷிகா ” இதுபோன்ற செய்திகள் என் அம்மாவை காயப்படுத்திய அளவுக்கு என்னை காயப்படுத்தவில்லை. ஏனென்றால், இந்த செய்தி முற்றிலும் பொய்யான ஒரு செய்தி. என்னை பற்றி அந்த மாதிரி வந்த செய்தி கொஞ்சம் கூட உண்மை இல்லை.
இது ரொம்ப ஓவர்! படக்குழுவுக்கு கண்டிஷன் போடும் ராஷ்மிகா மந்தனா?
இதற்கு நான் பல முறை விளக்கமும் கொடுத்து இருக்கிறேன். இப்படியான என்னை பற்றி ஒரு போலியான வதந்தி பரவிய பிறகு என் அம்மா அதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார். என்னுடைய அம்மா இப்படி அழுததை பார்த்து நானும் கதறி அழுதேன். ஏனென்றால், எங்கள் குடும்பம் முன்னதாக இதுபோன்ற என்னை பற்றி வதந்தியான செய்திகளைக் கேட்டதில்லை. இது போன்ற வதந்திகள் என்னை மிகவும் வேதனை அடைய வைத்தது.
சமூக வலைதளங்களில் யாருக்கு வேண்டுமானாலும் எதை நாளும் சொல்லும் அளவிற்கு சுதந்திரம் என்பது உண்டு தான். ஆனால் அதற்காக ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பொய்யாக எழுதச் சொல்லவில்லை” எனவும் நடிகை ஹன்ஷிகா தெரிவித்துள்ளார். மேலும் நடிகை ஹன்ஷிகா தற்போது காந்தாரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…