மணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஹீரோவாக போகிறார் ஜி.வி.பிரகாஷ்?!!
தமிழ் சினிமாவின் மிகத்திறமையான இயக்குனர்களுல் ஒருவர் மணிரத்னம். இவரது படங்கள் வருகிறது என்றால் அதற்கென தனி ரசிகர் பட்டாளமே காத்திருக்கும். அவரது இயக்கத்தில் கடைசியாக செக்கசிவந்த வானம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை தனசேகரன் என்பவர் இயக்க.உள்ளார்.
இந்த படத்தில் மணிரத்னம் திரைக்கதை, வசனம் எழுத உள்ளார். இந்த படத்தை மணிரத்னம்தான் இயக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவரால் இயக்க முடியவில்லை. இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
DINASUVADU