இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிகர் விஜய் நடித்த தலைவா, தெறி, ஆகிய படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவர் இசையமைத்து கொடுத்த இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் ஆகியும் இருந்தது. அந்த அளவிற்கு நல்ல பாடல்களை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விஜய்க்காக இசையமைத்து கொடுத்து இருந்தார்.
அந்த இரண்டு படங்களை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் விஜய் நடிக்கும் படங்கள் எதுக்கம் இசையமைத்து கொடுத்தது இல்லை. மீண்டும் இவர்களுடைய கூட்டணி ஒரு படத்திலாவது இணையுமா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷ் விஜய்யுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
ஜோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?
இது குறித்து பேசிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ” விஜய் சார் படத்திற்கு இசையமைக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். அவர் என்னுடைய சகோதரர் போல. அவருடன் இரண்டு படங்களில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் அவருடன் நான் பணியாரவேண்டும் என்றால் அதற்கான சந்தர்ப்பம் சரியாக அமைய வேண்டும்.
குறிப்பாக விஜய் சார் சுதா கொங்கரா மற்றும் வெற்றிமாறன் சார் இயக்கத்தில் நடித்தால் கண்டிப்பாக நான் இசையமைப்பேன். அப்போது தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். எனவே நானும் அவருடைய படத்திற்கு இசையமைக்க ஆசையுடன் இருக்கிறேன்” எனவும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…