சென்னை : ஜிவி பிரகாஷ்-சைந்தவி திருமண உறவில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் தீயாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், இருவருமே திருமண உறவை முடித்துக்கொள்வதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் குடும்பத்திற்கும் சைந்தவியின் குடும்பத்திற்கும் இடையே நடந்த பிரச்சனையின் போது சைந்தவி அவருடைய பெற்றோருக்கு ஆதரவாக பேசியதன் காரணத்தால் ஜிவி பிரகாஷ்க்கும் சைந்தவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இருவருமே கடந்த 6 மாதங்களாக தனி தனியாக பிரிந்து தான் வாழ்ந்துகொண்டு இருந்ததால் விவாகரத்து செய்ய முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, சைந்தவி – ஜிவி பிரகாஷ் தனித்தனியே அறிக்கை வெளியிட்டு பிரிவை உறுதி செய்தனர்.
இது குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது பதிவில் கூறியதாவது ” நீண்ட யோசனைக்குப் பிறகு, நானும் சைந்தவியும் திருமணமாகி 11 வருடங்கள் கழித்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்தோம்.
இந்த ஆழமான தனிப்பட்ட மாற்றத்தின் போது எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பிரிந்து வருகிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, இது ஒருவருக்கொருவர் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம்” என கூறியுள்ளார்.
மேலும், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும், பாடகி சைந்தவியும், கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்த சூழலில் இவர்கள் இருவரும் பிரிந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…