செல்வராகவன் இயக்கத்தில் விக்ரம்? ஜிவி சொன்ன சுவாரசிய தகவல்!

vikram

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் சிந்துபாத் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டதாம். இந்த சுவாரசியமான தகவலை இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ” செல்வராகவன் சார் இயக்கத்தில் விக்ரம் சார் சிந்துபாத் என்ற படத்தில் நடித்து வந்தார். படத்தின் படப்பிடிப்பு எல்லாம் அந்த சமயம் போய்க்கொண்டு இருந்தது. அந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளராக நான் தான் கமிட் ஆகி இருந்தேன். படத்திற்காக இசையமைக்கவும் ரெடி ஆகிவிட்டேன்.

நடிகை சிம்ரன் மகன்களை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்! 

படத்திற்காக இசையமைத்து ஒரு பாடலான நான் சொன்னதும் மழை வந்துச்சா பாடலை இசையமைத்தேன். ஆனால், சிந்துபாத் படம் பாதியில் கைவிடப்பட்டது. பிறகு அந்த பாடல் வேஸ்ட் ஆக கூடாது என்பதால் நான் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்திற்கு அதே பாடலை கொடுத்தேன்” என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கும் செல்வராகவனும், எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதில் நடிக்க கூடிய விக்ரம் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றினால் அந்த படம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதனை பற்றி சொல்லியா தெரியவேண்டும்? கண்டிப்பாக அந்த படம் உருவாகி இருந்திருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கும் என்றே கூறலாம். இருந்தாலும் இவர்கள் இருவரும் இணையவுள்ள அந்த படம் நின்றுபோனது ரசிகர்களை சோகம் ஆக்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்