ஆயிரத்தில் ஒருவனுக்கு கிடைக்காத வரவேற்பு தங்கலானுக்கு.? ஜி.வி.பிரகாஷ் ‘நச்’ பதில்.!

ஜி.வி.பிரகாஷ்: சியான் விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இருந்து மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல, இப்படத்தின் ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ட்ரைலரில் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை பேசப்பட்டது. அதே போல படத்திலும் பின்னணி இசை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று சென்னையில் தனியார் மருத்தகம் ஒன்றின் திறப்பு விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், தனியார் நிறுவன பெயரை குறிப்பிட்டு அதன் திறப்பு விழாவுக்கு வந்துள்ளேன். அவர்கள் 50 குழந்தைகளுக்கு இலவசமாக சிறப்பு காது கேட்கும் மிஷினை இலவசமாக வழங்கினார்கள் என பாராட்டினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு அந்த சமயத்தில் கிடைக்காத புகழ் இப்போது தங்கலான் படத்திற்கு கிடைத்துவிட்டதா என கேட்டார். அதற்கு பதில் அளித்த ஜிவி, தங்கலான் பட பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளது மகிழ்ச்சியை தந்துள்ளது. கடந்த சில நாட்களாக அந்த பாடல் ட்ரெண்டிங்கில் உள்ளது. படம் ஆகஸ்ட் 15இல் வருகிறது. படத்தை பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என ஜி.வி.பிரகாஷ் கூறினார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2010இல் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த திரைப்படம் வந்த போது படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் படம் வெளியாகி ஆண்டுகள் கழித்த பின்னர் படம், படத்தின் இசை என ரசிகர்கள் கொண்டாடினர். இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டார். படம் வெளியான போது யாரும் கவனிக்கவில்லை என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.