Categories: சினிமா

அந்த மனசு இருக்கே!! 1வயது குழந்தைக்கு மூளை அருகே கட்டி.! சிகிச்சைக்கு உதவிய ஜி.வி.பிரகாஷ்.!

Published by
கெளதம்

நடிகரும், இசையமைப்பாளருமான G.V.பிரகாஷ், சிறுவன் ஒருவருக்கு பண உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக அடியே படத்தில் நடித்த நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தற்போது அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெபல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் டீசர் இந்த தேதியில் வெளியானது.

நடிப்பு, இசையமைப்பது என பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், சமூக பயனர் ஒருவர் சிறுவனின் மூளைக்கு அருகில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற நிதியுதவி கோரி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.75,000 அனுப்பிய ஜி.வி.பிரகாஷ், என்னால் முடிந்த சிறிய உதவி என குறிப்பிட்டுள்ளார்.

சமூக பயனரான அமீர் என்பவர், தனது X தள பக்கத்தில், ஆன்லைன்ல பண உதவி கேக்குறதுக்கு பயமா இருக்கு. இருந்தாலும் கேக்குறேன், என் அக்கா பையனுக்கு (1 வயசு) சிறு மூளை பக்கத்துல கட்டி இருக்குன்னு கண்டறிய பட்டுள்ளது. கொஞ்சம் பயமா தான் இருக்கு. நேற்று இரவு ராம்நாட்டில் இருந்து மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனோம்.

இயக்குனர் அமீர் சொல்வது உண்மைதான்…அடித்து சொல்லும் நடிகர் சசிகுமார்.!

அவங்க என்னன்னா உடனே… ஆப்பரேஷன் பன்னனும்னு சொல்றாங்க. ஆப்பரேஷனுக்கு 3.5 முதல்  4 லட்சம் வரை ஆகும்னு சொல்றாங்க. எங்க குடும்பத்திலிருந்து 2 லட்சம் வரை ரெடி பண்ணிட்டேன். கொஞ்சம் டைம் கொடுத்தா கூட அங்க இங்கனு எப்படியாச்சும் ரெடி பன்னிருவேன். உடனே பன்ன சொல்றாங்க, உங்களால எதாச்சும் முடிஞ்சா பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ் என்று பண உதவி கோரியர்ந்தார்.

இதனையடுத்து, பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவந்த நிலையில், ஒரு வயது குழந்தையின் சிறுமூளைக்கு அருகில் உள்ள கட்டியை அகற்ற மருத்துவ உதவி கேட்டவருக்கு தன்னுடன் பங்காக ஜி.வி.பிரகாஷ், 75,000 ரூபாய் அனுப்பி உதவி கரம் நீட்டியுள்ளார். இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் உதவி செய்ததை அறிந்த பலரும், சமூக வலைத்தளங்கில் ஜிவிக்கு தங்களது பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

6 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

9 hours ago