gv prakash angry [file image]
சென்னை : தன் விவாகரத்து குறித்து மோசமாக விமர்சித்தவர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் பதில் அளித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர். இருந்தும் ஜிவி பிரகாஷ் மீது தவறு இருந்தது போல பலரும் அவரையும், அவருடைய விவாகரத்து பற்றியும் விமர்சித்து பேசி வந்தனர்.
இந்த சூழலில் விமர்சித்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் பேசப்படுவது துரதிஷ்டவசமானது.
பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது “யாரோ ஒரு தனிநபரின்” வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா…? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்களுக்கு தெரியும். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம்.
எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள் . தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” என்று கூறியுள்ளார்.
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்றவுடன் ஹைதராபாத் அணி வழக்கம் போலவே அதிரடி தான் காண்பிக்கப்போகிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தர்பார் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கினார்.…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான…