தமிழர் மாண்பு குறைந்துவிட்டதா? விமர்சனங்களுக்கு ஜிவி பிரகாஷ் கொடுத்த பதிலடி!

gv prakash angry

சென்னை : தன் விவாகரத்து குறித்து மோசமாக விமர்சித்தவர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் பதில் அளித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர். இருந்தும் ஜிவி பிரகாஷ் மீது தவறு இருந்தது போல பலரும் அவரையும், அவருடைய விவாகரத்து பற்றியும் விமர்சித்து பேசி வந்தனர்.

இந்த சூழலில் விமர்சித்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் பேசப்படுவது துரதிஷ்டவசமானது.

பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது “யாரோ ஒரு தனிநபரின்” வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா…? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்களுக்கு தெரியும். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம்.

எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன்.  ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள் . தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nayinar Nagendran
CM Break fast Scheme
china donald trump
Nainar Nagendran - R.S. Bharathi
rain news today
Nellai Iruttukadai Halwa shop