ஓடிடியில் வெளியாகிறது ‘குண்டூர் காரம்’ திரைப்படம்.!
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து ஜனவரி 12-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘குண்டூர் காரம்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலை வாரி குவித்தது
இப்படம் திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு OTT இல் திரையிடப்படுகிறது. அதன்படி, வரும் 9ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தில் நடிகர் மகேஷ் பாபுவை தவிர, ரம்யா கிருஷ்ணா, பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ஜெயராம், வெண்ணெலா கிஷோர், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், அஜய், ராவ் ரமேஷ், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் இப்படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மினுமினுக்கும் உடையில் ரித்திகா சிங்! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சைனா பாபு தனது ஹாரிகா அண்ட் ஹாசினி கிரியேஷன்ஸ் பேனரில் இப்படத்தை தயாரித்துள்ளார்.
Kurchini madathapetti… Ramana vasthunnadu. Meeru ‘koo koo koo’ anadam kosam ready ga undandi. ????????
Guntur Kaaram, coming to Netflix on 9 February in Telugu, Tamil, Malayalam, Kannada and Hindi.#GunturKaaramOnNetflix pic.twitter.com/cW6NxdszsV
— Netflix India South (@Netflix_INSouth) February 4, 2024