RRR, காஷ்மீர் ஃபைல்ஸ் படங்களை பின்னுக்கு தள்ளி ஆஸ்கர் ரேஸில் முந்தி சென்ற குஜராத் திரைப்படம்.!
சினிமாதுறையில் உயரிய விருதாகக் சொல்லப்படும் ஆஸ்கர் விருதானது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அதில் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டு ஆஸ்கர் விருதிற்கு தெலுங்கில் “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படமும், ஹிந்தியில் “தி காஷ்மீர் பைல்ஸ்” குஜராத்தியில் ‘செல்லோ ஷோ’ உள்ளிட்ட சில படங்கள் இந்தியா சார்பாக இந்திய ஆஸ்கர் கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படியுங்களேன்- அடிமேல் அடி.! விடுதலை தயாரிப்பாளரின் நிலைமை.! வெற்றிமாறன் செய்த காரியம்..
இதில் தற்போது , அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 95-வது ஆஸ்கர் விருதில் இந்தியா சார்பாக போட்டியிட குஜராத்தி படமான ‘செல்லோ ஷோ’ (Chhello Show) படம் தேர்வாகியுள்ளது. இயக்குனர் பேன் நளின் இயக்கத்தில் வெளியான இப்படம் ஏற்கனவே சில சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று விருதுகளை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
⭐ Not #RRR
⭐ Not #TheKashmirFiles…
⭐ #LastFilmShow [#ChhelloShow] is #India‘s official entry to the #Oscars… OFFICIAL POSTER… pic.twitter.com/uiWUSCAtB3— taran adarsh (@taran_adarsh) September 20, 2022