முதல் படத்திலே எனக்கு டைரக்ஷன் சொல்லி குடுக்குறியா! ‘காதல் ஓவியம்’ ஹீரோ மீது கடுப்பான பாரதிராஜா!
தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் கிராமத்து படங்களை மக்களுக்கு பிடிக்கும் படி எடுத்துக்கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. மண் மனம் மாறாத பல கமர்ஷியலாக கிராமத்து படங்களை இவர் தமிழ் சினிமாவுக்காக கொடுத்திருக்கிறார். இப்போது அவர் படங்களை இயக்கவில்லை என்றாலும் கூட நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது அதில் நடித்து கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், பேட்டிகள் மற்றும் பொதுமேடையில் அமைதியாக பேசும் பாரதி ராஜா ஒரு முறை படப்பிடிப்பு சமயத்தில் மிகவும் கோபப்பட்டாராம். இப்பொது இல்லை அவருடைய இயக்கத்தில் கடந்த 1982-ஆம் ஆண்டு வெளியான “காதல் ஓவியம்” படத்தின் சமயத்தில் தான். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருந்த சமயத்தில் தான் மிகவும் பாரதி ராஜா கோபப்பட்டாராம். அதற்கு காரணம் என்னவென்றால், படத்தில் ஹீரோவாக நடித்த கண்ணன் தானம்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில், நடிகர் கண்ணன் 15 நாட்கள் எதுவுமே பேசாமல் பாரதி ராஜா சொல்லும்படி மட்டும் தான் நடித்து வந்தாராம். பிறகு 15 நாட்கள் கழித்து இது சரில்லை இப்படி எடுக்கலாம் அப்படி எடுக்கலாம் என்று சொல்ல தொடங்கிவிட்டாராம். படத்தில் மாடு வைத்து ஒரு காட்சி எடுக்கப்பட்டு வந்ததாம்.
அந்த காட்சி எடுக்கப்படும் போது எல்லாம் சரியாக சிங்கிள் டேக்கில் எடுத்துவிட்டார்களாம். அந்த காட்சியை பார்த்துவிட்டு கண்ணன் இயக்குனர் போல் திரும்ப இந்த காட்சியை எடுக்கலாம் இதோட ரியாக்சன் சரில்லை என்று கூறினாராம். ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும் கடுப்பான பாரதிராஜா ஆமா யா இது உனக்கு முதல் படம் முதல் படத்திலேயே எனக்கு டைரக்ஷன் சொல்லி குடுக்குறியா? என்று கேட்டாராம் .
இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்து 10 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் படத்தின் இயக்குனருக்கு இயக்கம் பற்றி சொல்லி குடுக்குறியா என்று மிகவும் கோபத்துடன் கேட்டாராம். பிறகு என்ன செய்வது என்றே தெரியாமல் அப்படியே இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்புக்கு வராமல் கண்ணன் இருந்தாராம். இது தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 1982-ஆம் ஆண்டு வெளியான இந்த “காதல் ஓவியம்” திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. படத்தில் ராதா, ரமணமூர்த்தி, ஜனகராஜ், வெள்ளை சுப்பையா, மணிவண்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.