மாபெரும் வெற்றி…மக்களுக்கு சமர்ப்பணம்… வசூலில் மாஸ் காட்டும் விடுதலை.!!
தமிழ் சினிமாவில் ஒரு நல்ல படம் வெளியாகிவிட்டால் மக்கள் அதனை கொண்டாடி தீர்த்து விடுவார்கள். அப்படித்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான விடுதலை படம் கூட.
இந்த படத்தின் கதை அருமையாக இருந்ததால் படம் மக்களுக்கு பிடித்து போக படத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்களும் அருமையாக நடித்திருந்தார்கள் என்றே கூறலாம்.
படத்தைப் பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருவதால், வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி, விடுதலை படம் உலகம் முழுவதும் 52 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு “மாபெரும் வெற்றி…மக்களுக்கு சமர்ப்பணம்…” என போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். மேலும், விரைவில் விடுதலை படத்தின் இரண்டாவது பாகமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது