பெரும் சோகம்…பிரபல தமிழ் சீரியல் நடிகர் தற்கொலை…!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஹரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கானா பாடல்களை பாடியதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான ஹரிக்கு சின்னத்திரையில் “தவமாய் தவமிருந்து” சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்ததன் மூலம் அவர் சின்னத்திரை உலகில் அறிமுகமானார்.
இந்த சீரியலை தொடர்ந்து ” காற்றுக்கென்ன வேலி ” சீரியல் மூலம் இன்னுமே பிரபலமானார். என்றே கூறலாம். இந்நிலையில், ஹரி நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர் தற்கொலைக்கான காரணம் என்பது தெரியவரும்.