பெரும் சோகம்….பாடகி ராக்ஸ்டார் ரமணி அம்மாள் காலமானார்.!
பின்னணி பாடகி ராக்ஸ்டார் ரமணி அம்மாள்(63) காலமானார்.
நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட பின்னணி பாடகியுமான ரமணி அம்மாள் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 63. இவர் தமிழ் சினிமாவில் ஜூங்கா படத்தில் இடம்பெற்ற (ரைஸ் ஆஃப் டான்) பாடல் சண்டக்கோழி 2 படத்தில் (செங்கரத்தான் பாறையுல) பாடல், காப்பான் படத்தில் (சிரிக்கி) பாடல், நேர்மையுண்டு ஓடு ராஜா நெஞ்சமுண்டு படத்தில் (இன்டர்நெட் பசங்க) போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
காதல் படத்தில் ‘தண்டட்டி கருப்பாயி’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் முன்னணி சீரியல்களிலும் பாடியுள்ளார். ரமணியம்மாவின் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில், ரமணி அம்மாள் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.