அன்பின் மகத்திற்கு மகத்தான மனசு! – இயக்குனர் சுரேஷ் காமாட்சி

நடிகர் மகத்தை பாராட்டி ட்வீட்டர் பக்கத்தில் இயக்குனர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவு.
இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், நடிகர் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி ஆகியோர் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளதை தொடர்ந்து, நடிகர் மகத் தனது சம்பளத்தில் 50% குறைப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, இயக்குனர் சுரேஷ் காமாட்சி இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அன்பின் மகத்திற்கு மகத்தான மனசு. பாதிக்கு மேலேகூட சம்பளத்தைக் குறைக்கத் தயார் எனச் சொல்லியிருக்கும் மகத் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கட்டும். இப்படிப்பட்டவர்கள் வளரட்டும். வாழ்த்துகள் சகோதரா!’ என பதிவிட்டுள்ளார்.