எனக்கு கடவுள் கொடுத்த பெரிய வரம்! மாப்பிள்ளை ஜெயிச்சிட்டு வாங்க மாப்பிள்ளை! மாமியாரின் வாழ்த்து!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 85 நாட்களை கடந்து, கடைசி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட சாண்டி மாஸ்டரும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், கமலஹாசனிடம், சாண்டியின் மாமியார் சாண்டி குறித்து பேசுகையில், ‘சாண்டி எனக்கு கடவுள் கொடுத்த ஒரு பெரிய வரம். அவர நான் இதுநாள்வரைக்கும் மருமகனான பாத்தது இல்ல. மாப்பிள்ளைன்னு கூப்பிட்டது கூட இல்ல.
என்னோட அம்மாவும், அப்பாவும் சேர்ந்த உருவமா தான் நான் பாத்திருக்கேன். மாப்பிள்ளைன்னு நான் இவர சொன்னதே இல்லை. இன்னைக்கு சொல்றேன் ஜெயிச்சிட்டு வாங்க மாப்பிள்ளை என கண்கலங்க சொல்கிறார்.