பட்டி தொட்டி எங்கும் “சவதீகா“ தான்… அட்டகாசமாக நடனமாடி மாஸ் காட்டிய பாட்டிகள்.!
கட்டுக்கடங்காத சவதீகா ஃபீவர், சும்மா அட்டகாசமாக நடனமாடி மாஸ் காட்டிய பாட்டீகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஃபிவர் ரசிகர்களை தொற்றி கொண்டு விட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள சவதீகா (Sawadeeka) பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கிறது மட்டும் அல்லாமல் பாட்டிகள் கொண்டாடும் பாடலாக அமைந்திருக்கிறது.
இது வரை இந்த பாடலுக்கு எத்தனையோ, குட்டீஸ் , சுட்டீஸ் நடனம் ஆடியிருந்தாலும், இப்பொது ஜாலியாக 3 பாட்டிகள் டான்ஸ் ஆடிய வீடியோ நெட்டிசன்களை ‘அடேங்கப்பா’ என சொல்ல வைத்திருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பட்டி தொட்டி எங்கும் மட்டும் அல்லாமல் பாட்டிகள் கொண்டாடும் #Sawadeeka 💃💃🔥@Aravoffl @ajithFC @ajith_seenu@ANU74701092 @itz_MariaAK2_0 @Adhikravi @anirudhofficial @kayoas13 @apppuu03#AjithKumar #Vidaamuyarchi pic.twitter.com/hdQxli8sDF
— Ajith Siraj (@ssiraj1986) January 24, 2025
அதிலும், நடுவில் ஒரு பாட்டி அஜித் போலவே ‘கோட் ஷூட்’ மாட்டிட்டு போட்ட ஸ்டெப்ப கொஞ்சம் கவனியுங்க, சும்மா அலற விட்டுட்டாங்க என்றே சொல்ல வேன்டும். இவுங்க பாட்டிகள் இல்ல, நம்ம ஊரின் கியூட்டிகள் என சோஷியல் மீடியாவில் வீடியோ ஒரு பக்கம் வைரலாக, கமெண்ட்ஸ் மறு பக்கம் பறக்கிறது.