உதவி கேட்ட பாட்டி! ஓட்டுப்போட சொன்ன கேப்டன் விஜயகாந்த்..காரணம் என்ன?
Vijayakanth கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய கண் எதிரில் எதாவது தவறான சம்பவம் நடந்தால் உடனடியாக தட்டிகேட்க்கும் ஒரு தைரியமான மனிதர் என்றே கூறலாம். குறிப்பாக ஒரு முறை ஆச்சி மனோரமாவின் தங்க சங்கிலியை ஒருவர் திருடி சென்றபோது அவரை துரத்தி கொண்டு பிடித்து அடித்து தங்க சங்கிலியை கொடுத்தார். அது மட்டுமில்லாமல் பல விஷயங்கள் இப்படி செய்து இருக்கிறார்.
READ MORE – MGR மனைவி கொடுத்த பரிசு.! மேடையில் உணர்ச்சிவசப்பட்ட கேப்டன் விஜயகாந்த்.!
அப்படி தான் ஒரு முறை நெறஞ்ச மனசு படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு சம்பவம் நடைபெற்றது. சம்பவம் குறித்த தகவலை படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சமுத்திரக்கனி “கேப்டன் விஜயகாந்த் மாதிரி யாருமே வரமுடியாது. என்னால் மறக்க முடியாத சம்பவம் ஒன்று இருக்கிறது. அந்த சம்பவத்தை நான் இப்போது சொல்கிறேன்.
READ MORE – நண்பர் அம்மாவின் இறந்த செய்தி…500 காரில் வந்த விஜயகாந்த்! ஸ்தம்பித்து போன காவல் துறை!
ஒரு முறை நெறஞ்ச மனசு படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் கூட்டமாக கூடியது விஜயகாந்தை பார்க்கவேண்டும் என்று பலரும் கூடினார்கள். அந்த சமயம் வயதான பாட்டி ஒருவர் விஜயகாந்தை பார்க்கவேண்டும் என்று கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டு வந்தார். அதனை விஜயகாந்த் பார்த்துவிட்டு அந்த பாட்டியை மட்டும் உள்ளே இழுத்தார்.
read more- காரணமே இல்லாம பயங்கர சண்டை வரும்! விஜயகாந்த் குறித்து மனம் திறந்த வாகை சந்திரசேகர்?
உள்ளே இழுத்தவுடன் உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க என விஜயகாந்த் அந்த பட்டியிடம் கேட்டார். அதற்கு அந்த பாட்டி ரேஷன் கடையில் எனக்கு மண்ணெண்ணெய் மிகவும் கம்மியாக ஊற்றிவிட்டான் நீ வந்து அவனை அடிக்கவேண்டும் என்று கூறினார். அதற்கு விஜயகாந்த் சிரித்துக்கொண்டே இருந்தார். சும்மா எல்லாம் அவுங்கள அடிக்க முடியாது ஆத்தா என்று கூறினார்.
read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?
அப்படி கூறிவிட்டு நான் அடுத்த முறை தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன். நீ எனக்கு ஓட்டுப்போடு ஆத்தா அப்புறம் அவுங்கள அடிக்கலாம் என்று கூறி அனுப்பி வைத்தார். அனுப்பும் போதும் சும்மாக போகவில்லை டே பாட்டியை சாப்பிட வைத்து அனுப்புங்கள் என்று கூறினார். அது தான் கேப்டன்” எனவும் நெகிழ்ச்சியுடன் சமுத்திரக்கனி பாராட்டி பேசியுள்ளார்.