பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அரபி குத்து பாடலுக்கு முதியவர் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
குறிப்பாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையமைத்து பாடியிருந்த ‘அரபிக் குத்து ‘ பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம். இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்களும், மக்களும் நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டிருந்தனர். மேலும், இந்த பாடல் வெளியானத்திலிருந்து தற்போது வரை வரவேற்பு குறையாமல் யூடியூபில் அதிகம் பார்வையாளர்களை கடந்து வருகிறது.
இந்த பாடலுக்கு நடனமாடி இன்னும் பலரும் அதற்கான வீடியோக்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது முதியவர் ஒருவர் தன்னுடைய வீட்டிற்குள் ‘அரபிக் குத்து’ பாடலை போட்டு கொண்டு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது மனைவியிடம் ஜாலியாக விளையாடி கொண்டே அவர் ஆடும் நடனம் அனைவரையும் ஈர்த்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…