‘அரபிக் குத்து’ பாடலுக்கு அசத்தல் ஆட்டம் போட்ட தாத்தா.! வைரலாகும் சூப்பர் வீடியோ…
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அரபி குத்து பாடலுக்கு முதியவர் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
குறிப்பாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையமைத்து பாடியிருந்த ‘அரபிக் குத்து ‘ பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம். இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்களும், மக்களும் நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டிருந்தனர். மேலும், இந்த பாடல் வெளியானத்திலிருந்து தற்போது வரை வரவேற்பு குறையாமல் யூடியூபில் அதிகம் பார்வையாளர்களை கடந்து வருகிறது.
இந்த பாடலுக்கு நடனமாடி இன்னும் பலரும் அதற்கான வீடியோக்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது முதியவர் ஒருவர் தன்னுடைய வீட்டிற்குள் ‘அரபிக் குத்து’ பாடலை போட்டு கொண்டு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது மனைவியிடம் ஜாலியாக விளையாடி கொண்டே அவர் ஆடும் நடனம் அனைவரையும் ஈர்த்துள்ளது.
#Viralvideo : பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அரபி குத்து பாடலுக்கு முதியவர் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. #Beast | #ThalapathyVijay | #ArabicKuthu | @anirudhofficial | @actorvijay | @Siva_Kartikeyan pic.twitter.com/PlLY3iuRz8
— CineBloopers???? (@CineBloopers) November 3, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)
புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!
December 18, 2024![Pushpa2](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Pushpa2.webp)
கஞ்சா வழக்கு : சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல்!
December 18, 2024![Savuku Sankar arrested](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Savuku-Sankar-arrested.webp)