பிரமாண்டமாக களமிறங்க தேதி குறிச்சாச்சு… அண்ணாச்சி 5 மொழிகளில் மாஸ் என்ட்ரி…
தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்ததாக “தி லெஜன்ட்” படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த திரைப்படத்தில் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதால் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய செரி & ஜெடி ஆகியோர் இயக்கியுள்ளார்கள்.
படத்தை சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் தான் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ் ஆக தயாராக உள்ளது படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
இந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது அதன்படி, “தி லெஜண்ட்” திரைப்படம் வரும் ஜுலை 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.