கிராமி விருது 2023: யார் ? யாருக்கு ? என்னென்ன விருது.! முழு வெற்றியாளர்கள் பட்டியல் இதோ.!

Published by
பால முருகன்

65-வது கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விருது விழாவில் இசைத்துறையில் சிறந்த பாடல் ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர் என சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், யார் யாருக்கு விருது வழங்கப்பட்டது என்ற முழு பட்டியலை பார்க்கலாம்.

கிராமி 2023: வெற்றி பெற்றவர்களின் பட்டியல்
சிறந்த ஆல்பத்திற்கான விருது :

பெங்களூருவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், “டிவைன் டைட்ஸ்” ஆல்பத்திற்காக மூன்றாவது கிராமி விருதை வென்றுள்ளார்.

சாதனை பாடகிகான விருது :

இந்த ஆண்டின் சாதனை பாடகிக்கான விருதை லீஸோ (lizzo) வென்றார்.

சிறந்த ஆல்பத்திற்கான விருது :

இந்த ஆண்டின் சிறந்த ஆல்பத்திற்கான விருதை, ஹாரி ஸ்டைலஸ் (harry styles ) இன் ஹார்ரி’ஸ் ஹவுஸ் (harry’s house) வென்றது.

சிறந்த பாடலுக்கான விருது :

இந்த ஆண்டிற்கான சிறந்த பாடலுக்கான விருதை லீஸோ ( lizzo) வின் அபௌட் டாம்ன் டைம் (About Damn Time) பாடல் வென்றுள்ளது.

சிறந்த புதிய கலைஞர் விருது :

இந்த ஆண்டின் சிறந்த புதிய கலைஞர் விருதை, சமாரா ஜாய் (Samara Joy) வென்றுள்ளார்.

சிறந்த சோலோ பாப் பெர்பர்மன்ஸ்க் காண விருது :

இத்தாண்டிற்கான சிறந்த சோலோ பாப் பெர்பர்மன்ஸ்க் காண விருதை ஜஸ்ட் லைக் தட் (Just like That) படத்திற்காக போனி ரைட் (Bonnie Raitt) வென்றுள்ளார்.

சிறந்த நடனம்/மின்னணு பதிவு :

சிறந்த நடனம் மற்றும் மின்னணு இசை பதிவிற்கான (Best Dance/Electronic Recording) விருதை பாடகி பியான்சே (Beyoncé) வின் பிரேக் மை சவுல் ( Break My Soul) பாடல் வென்றுள்ளது.

சிறந்த நவீன இசைக்கருவி ஆல்பம்:

நவீன இசைக்கருவிகளை கொண்டு கட்டமைக்கப்பட்ட சிறந்த இசை ஆல்பமாக ஸ்னார்கிபப்பி (Snarky Puppy) எனும் குழு உருவாக்கிய எம்பயர் சென்ட்ரல் (Empire Central) எனும் பாடல் பெற்றுள்ளது.

சிறந்த ராக் பெர்பாமன்ஸ் :

சிறந்த ராக் பெர்பாமன்ஸ் (Rock Performance) ஆட்டம் போட வைத்த ஆல்பமாக பிராண்டி சார்லி (Brandi Carlile) இசையமைத்த புரோக்கன் கார்ஸ் (Broken Horses) எனும் பாடல் வென்றுள்ளது. சிறந்த உலோக இசையாக, ஓசி ஊஸ்பர்ன் டோனி இயோமி (Ozzy Osbourne and Tony Iommi ) இணைந்து உருவாக்கிய டிகிரேடேஷன் ரூல்ஸ் (Degradation Rules) எனும் பாடல் தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த ராக் பர்பாமன்ஸ் மற்றும் சிறந்த ராக் ஆல்பம் :

சிறந்த ராக் பாடலாக (Best Rock Song) பிராண்டி கார்லி (Brandi Carlile)உருவாகிய புரோக்கன் ஹார்ஸ் (Broken Horses) எனும் பாடல் பெற்றுள்ளது. அதே போல, சிறந்த ராக் ஆல்பமாக (Best Rock Album) ஓசி ஊஸ்பர்ன் (Ozzy Osbourne) உருவாக்கிய பேஷண்ட் நம்பர் 9 (Patient Number 9) பாடல் தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த மாற்று இசை பர்பாமன்ஸ் மற்றும் ஆல்பம்  :

சிறந்த மாற்று இசை பர்பாமன்ஸ் (Best Alternative Music Performance) என வெட் லெக் (Wet Leg) இசை ஆல்பத்தில் செய்ஸ் லாங் (Chaise Lounge) எனும் பாடல் தேர்வு செய்யப்பட்டது. அதே போல மாற்று இசைஆல்பமாக மேற்கண்ட அதே வெட் லெக் (Wet Leg) ஆல்பம் வென்றது.

சிறந்த R&B பர்பாமன்ஸ் மற்றும் பாரம்பரிய R&B பர்பாமன்ஸ்:

சிறந்த R&B பர்பாமன்ஸ் (Best R&B Performance) ஆக முனி லாங் (Muni Long) பாடிய Hrs & Hrs எனும் பாடல் பெற்றுள்ளது. அதே போல சிறந்த பாரம்பரிய R&B பர்பாமன்ஸ் என (Best Traditional R&B Performance) பியான்ஸ் (Beyoncé) என்பவருக்கு பிளாஸ்டிக் ஆஃப் சோபாவுக்காக (Plastic Off the Sofa) அறிவிக்கப்ட்டுள்ளது.

சிறந்த மக்கள் இசை மற்றும் சிறந்த R&B ஆல்பம் :

சிறந்த மக்கள் இசைகளுக்கான விருதை ஸ்டீவ் லேசி (Steve Lacy) உருவாக்கிய சிறந்த முற்போக்கான R&B ஆல்பம் (Best Progressive R&B Album) ஜெமினி ரைட்ஸ் (Gemini Rights) எனும் பாடல் பெற்றுள்ளது. அதேபோல், ராபர்ட் கிளாஸ்பர் (Robert Glasper) உருவாக்கிய சிறந்த R&B ஆல்பம் (Best R&B Album) பிளாக் ரேடியோ III (Black Radio III) எனும் பாடல் வென்றுள்ளது.

சிறந்த ராப் பெர்பாமன்ஸ் மற்றும் சிறந்த மெலோடிக் ராப் பெர்பாமன்ஸ் :

சிறந்த ராப் பெர்பாமன்ஸுக்கான விருதை (Best Rap Performance) கென்ட்ரிக் லாமர் (Kendrick Lamar) வழங்கிய தி ஹார்ட் பார்ட் 5 (The Heart Part 5) எனும் பாடல் பெற்றுள்ளது. சிறந்த மெலோடிக் ராப் செயல்திறனுக்கான விருதை (Best Melodic Rap Performance) டார்க் மற்றும் டீம்ஸ் இசைக்குழு (Drake &Tems) உருவாக்கிய வெயிட் பார் யூ (Wait for U) எனும் பாடல் வென்றுள்ளது.

சிறந்த ராப் பாடல், சிறந்த ராப் ஆல்பம் மற்றும் சிறந்த நாட்டுப்புற தனி நிகழ்ச்சி :

சிறந்த ராப் பாடலுக்கான விருதை (Best Rap Song) கென்ட்ரிக் லாமர் (Kendrick Lamar) பாடிய தி ஹார்ட் பார்ட் 5 (The Heart Part 5) என்ற பாடல் பெற்றுள்ளது. சிறந்த ராப் ஆல்பம் (Best Rap Album) மற்றும் சிறந்த நாட்டுப்புற தனி நிகழ்ச்சி (Best Country Solo Performance) விருதை வில்லி நெல்சன் (Willie Nelson) லைவ் பார்ரெவர் (Live Forever) எனும் பாடலுக்காக பெற்றுள்ளது.

சிறந்த நாடு இரட்டையர் மட்டும் குழு பெர்பாமன்ஸ் மற்றும் சிறந்த நாட்டுப்புற பாடல்:

சிறந்த நாடு இரட்டையர் மட்டும் குழு செயல்திறனுக்கான விருதை (Best Country Duo/Group Performance) கார்லி பியர்ஸ் & ஆஷ்லே மெக்பிரைட் (Carly Pearce & Ashley McBryde) ஆகியோர் நெவர் வண்டெட் டு பி தேட் கேர்ள் (Never Wanted to Be That Girl) எனும் பாடலுக்காக வென்றுள்ளனர். சிறந்த நாட்டுப்புற பாடலுக்கான (Best Country Song) விருதை கோடி ஜான்சன் (Cody Johnson) பாடிய டில் யூ கேனாட் (Til You Can’t) என்ற பாடல் பெற்றுள்ளது.

சிறந்த பெரிய ஜாஸ் குழு மற்றும் சிறந்த நற்செய்தி நிகழ்ச்சி பாடல் :

இந்த ஆண்டின் சிறந்த பெரிய ஜாஸ் குழுமமாக (Best Large Jazz Ensemble Album) ஸ்டீவன் ஃபீஃப்கே (Steven Feifke), பிஜான் வாட்சன் (Bijon Watson) & ஜெனரேஷன் கேப் ஜாஸ் (Generation Gap Jazz Orchestra) வென்றது.  சிறந்த நற்செய்தி நிகழ்ச்சி பாடலுக்கான விருதை மேவரிக் சிட்டி இசை (Kingdom feat. Naomi Raine & Chandler Moore) என்ற ஆல்பம் பாடலுக்காக கிர்க் பிராங்க்ளின் (Kirk Franklin) ஆகியோருக்கு அறிவிக்கப்ட்டுள்ளது.

சிறந்த சமகால கிறிஸ்தவ இசை நிகழ்ச்சி மற்றும் சிறந்த நற்செய்தி ஆல்பம் :

சிறந்த சமகால கிறிஸ்தவ இசை நிகழ்ச்சி (Best Contemporary Christian Music Performance/Song) பாடலுக்கான விருதை பியர் இஸ் நாட் மீ பியூச்சர் (Fear Is Not My Future) என்ற பாடலுக்காக மேவரிக் சிட்டி மியூசிக் & கிர்க் ஃபிராங்க்ளின் (Maverick City Music & Kirk Franklin) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நற்செய்தி ஆல்பமாக (Maverick City Music) மேவரிக் சிட்டி மியூசிக் & கிர்க் ஃபிராங்க்ளின் – கிங்டம் புக் ஒன் (டீலக்ஸ்) [Kingdom Book One (Deluxe)] தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த சமகால கிறிஸ்தவ இசை ஆல்பம் :

சிறந்த சமகால கிறிஸ்தவ இசை (Best Contemporary Christian Music Album) ஆல்பத்திற்காக (Maverick City Music – Breathe) மேவரிக் சிட்டி மியூசிக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த ரூட்ஸ் நற்செய்தி ஆல்பம் :

சிறந்த ரூட்ஸ் நற்செய்தி (Best Roots Gospel Album) ஆல்பமாக டென்னசி ஸ்டேட் யுனிவர்சிட்டி (Tennessee State University) ஆல்பத்திற்காக (The Urban Hymnal) இசைக்குழு வென்றது. ரூபன் பிளேட்ஸ் & போகா லிவ்ரே (Rubén Blades & Boca Livre) சிறந்த லத்தீன் பாப் (Best Latin Pop Album) ஆல்பத்தை ‘பாசிரோஸ்’ (Pasieros) படத்திற்காக வென்றது. செஸ்ரோவிரென்கா ரோசாலியா ‘மோட்டோமாமி’ (Motomami) க்காக சிறந்த மாற்று லத்தீன் ஆல்பத்திற்கான கிராமி விருதை வென்றார்.

சிறந்த பிராந்திய மெக்சிகன் இசை :

லாஸ் டைக்ரெஸ் டெல் நோர்டே (Natalia Lafourcade) சிறந்த பிராந்திய மெக்சிகன் இசை ஆல்பத்திற்காக (Best Regional Mexican Music Album) பரிந்துரைக்கப்பட்டார். கிராமியின் சிறந்த வெப்பமண்டல லத்தீன் ஆல்பம் விருதை மார்க் ஆண்டனி (Pa’lla Voy) “பல்லா வோய்” பாடலுக்காக வென்றார் வென்றார். டர்ட்டி டஜன் பிராஸ் இசைக்குழுவுடன் (Aaron Neville) ஆரோன் நெவில் சிறந்த அமெரிக்க ரூட்ஸ் செயல்திறன் (Best American Roots Performance) 2023 கிராமி விருதுகளை வென்றார். ‘மேட் அப் மைண்ட்’ (Made Up Mind) படத்திற்காக போனி ராய்ட் (Bonnie Raitt) சிறந்த சிறந்த அமெரிக்கானா நடிப்புக்கான விருதை வென்றார்.

சிறந்த அமெரிக்க ரூட்ஸ் பாடல் :

சிறந்த அமெரிக்க ரூட்ஸ் பாடல்கான (Best American Roots Song) விருதை போனி ராய்ட் (Bonnie Raitt) அமெரிக்கன் ஜஸ்ட் லைக் தட் ரூட்ஸ் (Just Like That roots) பாடலுக்காக வென்றார். சிறந்த அமெரிக்கானா ஆல்பத்திற்கான (Best Americana Album)  விருதை பிராண்டி கார்லைல் (Brandi Carlile) ‘IN THESE SILENT DAYS’ -காக வென்றார்.

சிறந்த பொறியியல் ஆல்பம் மற்றும் சிறந்த தயாரிப்பாளர் :

சிறந்த பொறியியல் ஆல்பம் கான விருதை  (Harry Styles) ஹாரி ஸ்டைல்ஸ் ‘(Harry’s House) ஹாரிஸ் ஹவுஸ்’க்கான ஆண்டின் சிறந்த ஆல்பத்தை வென்றார். ஜாக் அன்டோனாஃப், (Jack Antonoff) கிளாசிக்கல் அல்லாத (Non-Classical) ஆண்டின் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை வென்றார்.

சிறந்த ப்ளூகிராஸ் இசை ஆல்பம் :

சிறந்த ப்ளூகிராஸ் இசை ஆல்பத்திற்கான விருதை (Best Bluegrass Album) மோலி டட்டில் (Molly Tuttle) மற்றும் கோல்டன் ஹைவே இசைக்குழு(Golden Highway) இசையமைத்த, க்ரூக்ட்டு ட்ரீ என்ற ஆல்பம்(Crooked Tree) வென்றுள்ளது.

சிறந்த பாரம்பரிய ப்ளூஸ் இசை ஆல்பம்:

சிறந்த பாரம்பரிய ப்ளூஸ் இசை ஆல்பத்திற்கான (Best Traditional Blues Album) விருதை தாஜ்மஹால் (Taj Mahal) மற்றும் ரை கூடர் (Ry Cooder) இசையமைத்த கெட் ஆன் போர்டு (Get on Board) என்ற ஆல்பம் வென்றுள்ளது.

சிறந்த சமகால ப்ளூஸ் இசை :

சிறந்த சமகால ப்ளூஸ் இசை (Best Contemporary Blues) ஆல்பத்திற்கான விருதை அமெரிக்க இசைக்கலைஞர் எட்கர் ஹாலண்ட் விண்டர் (Edgar Winter) இடையமைத்த பிரதர் ஜானி (Brother Johnny) என்ற ஆல்பம் வென்றுள்ளது.

சிறந்த நாட்டுப்புற இசை மற்றும் சிறந்த பிராந்திய ரூட்ஸ் இசை :

சிறந்த நாட்டுப்புற இசை (Best Folk Album) ஆல்பத்திற்கான விருதை அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியரான மேடிசன் கன்னிங்ஹாம் (Madison Cunningham) இசையமைத்த ரிவீலெர் (Revealer)ஆல்பம் வென்றுள்ளது. சிறந்த பிராந்திய ரூட்ஸ் இசை (Best Regional Roots Music Album) ஆல்பத்திற்கான விருதை ராங்கி டேங்கி இசைக் குழுமம் (Ranky Tanky) இசையமைத்த நியூ ஆர்லியன்ஸ் ஜாஸ் & ஹெரிடேஜ் பெஸ்டிவெல் (Live at the 2022 New Orleans Jazz & 2022 Heritage Festival ) ஆல்பம் வென்றுள்ளது.

சிறந்த ரெக்கே இசை ஆல்பம் மற்றும் சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி :

சிறந்த ரெக்கே இசை (Best Reggae Album) ஆல்பத்திற்கான விருதை இசைக் கலைஞர் கபாகா பிரமிட் (Kabaka Pyramid) இசையமைத்த தி கலிங் (The Kalling) ஆல்பம் வென்றுள்ளது. சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சிக்கான (Best Global Music Performance) விருதை வூட்டர் கெல்லர்மேன்(Wouter Kellerman), ஜேக்ஸ் பான்ட்வினி (Zakes Bantwini) மற்றும் நோம்செபோ (Nomcebo Zikode) ஆகியோர் பாடிய பேயேதே (Bayethe) வென்றுள்ளது.

சிறந்த உலகளாவிய இசை மற்றும் சிறந்த குழந்தைகளுக்கான இசை:

சிறந்த உலகளாவிய இசை (Best Global Music Album) ஆல்பத்திற்கான விருதை மாசா டகுமி (Masa Takumi) இசையமைத்த சகுரா (Sakura) ஆல்பம் வென்றுள்ளது. சிறந்த குழந்தைகளுக்கான இசை (Best Children’s Music Album) ஆல்பத்திற்கான விருதை ஆல்பாபெட் ராக்கர்ஸ் (Alphabet Rockers) இசைக்குழு இசையமைத்த, தி மூவ்மென்ட் (The Movement) ஆல்பம் வென்றுள்ளது.

சிறந்த ரீமிக்ஸ் பதிவு மற்றும் சிறந்த இம்மர்சிவ் ஆடியோ:

சிறந்த ரீமிக்ஸ்கான (Best Remixed Recording) விருதை லிசோ (Lizzo) பர்பில் டிஸ்கோ மெஷின் ரீமிக்ஸ் (Purple Disco Machine Remix) பாடலுக்காக வென்றுள்ளார். சிறந்த இம்மர்சிவ் ஆடியோ (Best Immersive Audio Album) ஆல்பம்கான விருதை ஸ்டீவர்ட் கோப்லேண்ட் & ரிக்கி கெ ஆகியோர் (Stewart Copeland & Ricky Kej) தீவின் டிடிஎஸ் ஆல்பத்திற்காக வாங்கியுள்ளனர்.
சிறந்த ஆடியோ புத்தகம், விவரிப்பு மற்றும் கதை சொல்லும் பதிவு :

ஆடியோ வடிவில் கதை சொல்லும் (Best Audio Book, Narration, and Storytelling Recording) வயலா டேவிஸ் (Viola Davis) என்பவரின் ஃபைண்டிங் மீ (Finding Me) எனும் ஆடியோ புத்தகம் தேர்வாகியுள்ளது. சிறந்த கவிதை சொல்லும் ஆடியோ ஜே லவி (J.Ivy) எழுதிய தி பொயட் ஹூ சட் பை தி டோர் (The Poet Who Sat by the Door)

சிறந்த காமெடி ஆல்பம் மற்றும் சிறந்த தியேட்டர் இசை ஆல்பம் :

சிறந்த காமெடி ஆல்பம் (Comedy Album) டேவ் சாப்பேல்லே (Dave Chappelle)வின் தி குளோசர் (The Closer) எனும் ஆல்பம் வெற்றி பெற்றுள்ளது. சிறந்த தியேட்டர் இசை ஆல்பம் (Musical Theater Album) இன்டூ தி வுட்ஸ் (Into the Woods) எனும் ஆல்பம் தேர்வாகியுள்ளது.ஜாக் அன்டோனாஃப், (Judith Sherman) கிளாசிக்கல் அல்லாத ஆண்டின் (Producer of the Year, Classical) சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை வென்றார்.

சிறந்த விசுவல் மீடியா இசை தொகுப்பு மற்றும் சிறந்த பொறியியல் ஆல்பம், கிளாசிக்கல்:

சிறந்த விசுவல் மீடியாவிற்கான இசை தொகுப்பு (Compilation Soundtrack for Visual Media) வேரியஸ் ஆர்ட்டிஸ்ட் (Various Artists) எனும் குழுவினரின் என்கன்டோ (Encanto) எனும் ஆல்பத்திற்கு கிடைத்துள்ளது. சிறந்த பொறியியல் ஆல்பம், கிளாசிக்கல் விருதை எட்வின் அவுட்வாட்டர் & சிகாகோ சிம்பொனி ஆதி மேக்கிங் ஆஃப் தி ஆர்கெஸ்ட்ரா இசை குழு ( The Making of the Orchestra) ஆல்பத்திற்காக வெற்றிபெற்றுள்ளனர்.

சிறந்த ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி :

சிறந்த ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்கான (Best Orchestral Performance) விருதை நியூயார்க் யூத் சிம்பொனி (New York Youth Symphon) ஆர்கெஸ்ட்ரா குழுவின் புளோரன்ஸ் பிரைஸ், ஜெஸ்ஸி மாண்ட்கோமெரி, வலேரி கோல்மன் ஆகியோரின் படைப்புகள் (Works by Florence Price, Jessie Montgomery, Valerie Coleman) வென்றுள்ளது.

சிறந்த ஓபரா பதிவு :

சிறந்த ஓபரா பதிவிற்கான விருதை தி மெட்ரோபொலிட்டன் ஓபரா ஆர்கெஸ்ட்ரா (The Metropolitan Opera Orchestra) மற்றும் ஓபரா கோரஸ் (Opera Chorus) பிளான்சார்ட் : பயர் சட் அப் இன் மை போன்ஸ் (Blanchard: Fire Shut Up in My Bones) ஆல்பம் வென்றுள்ளது.

சிறந்த இசை நிகழ்ச்சி:

சிறந்த இசை நிகழ்ச்சிக்கான (Best Choral Performance) விருதை தி கிராசிங் (The Crossing) பாடிய பார்ன் (Born) எனும் பாடல் வென்றுள்ளது.

சிறந்த சேம்பர் இசை மற்றும் சிறிய குழும பெர்பாமன்ஸ்:

சிறந்த சேம்பர் இசை மற்றும் சிறிய குழும பெர்பாமன்ஸ்க்கான (Best Chamber Music/Small Ensemble Performance) விருதை அட்டாக்கா குவார்டெட்வின் (Attacca Quarte) கரோலின் ஷா: எவர்கிரீன் (Caroline Shaw: Evergreen) ஆல்பம் வென்றுள்ளது.

சிறந்த கிளாசிக்கல் இன்ஸ்ட்ருமென்டல் சோலோ :

சிறந்த கிளாசிக்கல் இன்ஸ்ட்ருமென்டல் சோலோ (Best Classical Instrumental Solo) விருதை டைம் பார் த்ரீ (Time for Three) , பிலடெல்பியா இசைக்குழு (The Philadelphia Orchestra) மற்றும் சியான் ஜாங் (Xian Zhang) கலைஞர்களின் லெட்டர்ஸ் பார் தி பியூச்சர் (Letters for the Future) எனும் ஆல்பம் வென்றுள்ளது.

சிறந்த கிளாசிக்கல் சோலோ வோகல் ஆல்பம் :

சிறந்த கிளாசிக்கல் சோலோ வோகல் (Best Classical Solo Vocal Album) ஆல்பத்திற்கான விருதை ரெனீ ஃப்ளெமிங் & யானிக் நெசெட்-செகுயின் (Renée Fleming & Yannick Nézet-Séguin) வாய்ஸ் ஆப் நேச்சர் : தி அந்த்ரோபோசேன் (Voice of Nature: The Anthropocene) என்ற ஆல்பம் வென்றுள்ளது.

சிறந்த கிளாசிக்கல் தொகுப்பு:

சிறந்த கிளாசிக்கல் தொகுப்பிற்கான (Best Classical Compendium) விருதை அமெரிக்க இசையமைப்பாளர் கிட் வேக்லியின் (Kitt Wakeley) அன் அடாப்சன் ஸ்டோரி (An Adoption Story ) வென்றுள்ளது.

சிறந்த சமகால கிளாசிக்கல் இசையமைப்பு:

சிறந்த சமகால கிளாசிக்கல் இசையமைப்பிற்கான (Best Contemporary Classical Composition) விருதை டைம் பார் த்ரீ (Time for Three) , பிலடெல்பியா இசைக்குழு (The Philadelphia Orchestra) மற்றும் சியான் ஜாங்கின் (Xian Zhang) பூட்ஸ்:காண்டாக்ட் (Puts:Contact) பாடல் வென்றுள்ளது.

சிறந்த இசை வீடியோ :

சிறந்த இசை வீடியோவிற்கான (Best Music Video) விருதை அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியாரான டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift) ஆல் டூ வெல் : தி ஷார்ட் பிலிம் (All Too Well: The Short Film) வென்றுள்ளது.

சிறந்த இசை திரைப்படம் :

சிறந்த இசை திரைப்படத்திற்கான (Best Music Film) விருதை பல்வேறு கலைஞர்கள் (Various Artists) உருவாக்கிய ஜாஸ் ஃபெஸ்ட்: ஒரு நியூ ஆர்லியன்ஸ் ஸ்டோரி (Jazz Fest: A New Orleans Story) வென்றுள்ளது.

சிறந்த சவுண்ட் ட்ராக் மற்றும் விஷுவல் மீடியா:

சிறந்த சவுண்ட் ட்ராக் மற்றும் விஷுவல் மீடியாவிற்கான (Best Sound Track And Visual Media) விருதை பல்வேறு கலைஞர்கள் (various artists) என்காண்டோ(Encanto)குழு வென்றுள்ளது.

விஷுவல் மீடியாவிற்கான சிறந்த பின்னணி ஸ்கோர்:

விஷுவல் மீடியாவிற்கான சிறந்த ஸ்கோர் ஒலிப்பதிவு (Best Score Soundtrack for Visual Media ) விருதை, ஜெர்மைன் பிராங்கோ (Germaine Franco) என்காண்டோ (Encanto) வென்றுள்ளார்.

வீடியோ கேம்கள் மற்றும் பிற ஊடாடும் ஊடகங்களுக்கான சிறந்த ஸ்கோர் ஒலிப்பதிவு:

வீடியோ கேம்கள் மற்றும் பிற ஊடாடும் ஊடகங்களுக்கான சிறந்த ஸ்கோர் ஒலிப்பதிவை(Best Score Soundtrack for Video Games and Other Interactive Media), ஸ்டெபானி எகனோமோ (Stephanie Economo) அசாசின்’ஸ் கிரீட் வல்ஹல்லா : டான் ஆஃப் ரக்னாரோக் (Assassin’s Creed Valhalla: Dawn of Ragnarök) வென்றுள்ளார்.

விஷுவல் மீடியாவுக்காக எழுதப்பட்ட சிறந்த பாடல்:

விஷுவல் மெடியாவிற்கான சிறந்த பாடல்களுக்கான (Best Song Written for Visual Media) விருதுகளை கீழ்வரும் பாடல்கள் வென்றுள்ளன. கரோலினா கைடன் – லா கைடா, மௌரோ காஸ்டிலோ, அடாசா, ரென்சி ஃபெலிஸ், டயான் குரேரோ, ஸ்டெபானி பீட்ரிஸ் & என்காண்டோ. (Carolina Gaitán – La Gaita, Mauro Castillo, Adassa, Rhenzy Feliz, Diane Guerrero, Stephanie Beatriz & Encanto).

சிறந்த கருவி அமைப்பு :

சிறந்த கருவி அமைப்பிற்கான (Best Instrumental Composition) விருதை ஜெஃப்ரி கீசர்(Geoffrey Keezer) ரெபியூஜ் (Refuge)படத்திற்காக வென்றார்.

சிறந்த ஏற்பாடு, கருவி அல்லது ஒரு கேப்பெல்லா:

சிறந்த கருவி ஏற்பாடுக்கான (Best Arrangement, Instrumental or A Cappella)  விருதை மேக்னஸ் லிண்ட்கிரென், ஜான் பீஸ்லி & SWR பிக் பேண்ட் மார்ட்டின்(Magnus Lindgren, John Beasley & The SWR Big Band Featuring Martin) பெற்றுள்ளார்.

சிறந்த குரலிற்கான விருது :

சிறந்த குரலிற்கான விருதை, (Best Vocals) கிறிஸ்டின் மெக்வி (Christine McVie) பாடல் பறவைக்காக  (Songbird) பெற்றார்.

சிறந்த பதிவு தொகுப்பு:

சிறந்த பதிவு தொகுப்புக்கான விருதை தம்சுய்-காவலன் (Tamsui-Kavalan) சீன இசைக்குழு – ஆரம்பம் இல்லாத ஆரம்பம் (Tamsui-Kavalan Chinese Orchestra – Beginningless Beginning) வென்றது.

சிறந்த சிறப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பு தொகுப்பு:

சிறந்த சிறப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பு தொகுப்பு (Best Special Limited Edition Package) காண விருதை,தி கிரேட்ஃபுல் டெட் – இன் மற்றும் அவுட் தி கார்டன்: மேடிசன் ஸ்கொயர் கார்டன் ’81, ’82, ’83 (The Grateful Dead – In and Out of the Garden: Madison Square Garden ’81, ’82, ’83) வென்றுள்ளது.

சிறந்த ஆல்ப குறிப்பு:

சிறந்த ஆல்ப குறிப்புக்கான விருதை,வில்கோ – யாங்கி ஹோட்டல் ஃபாக்ஸ்ட்ராட் (20வது ஆண்டு சூப்பர் டீலக்ஸ் பதிப்பு) (Wilco – Yankee Hotel Foxtrot (20th Anniversary Super Deluxe Edition) ஆல்பம் வென்றது.

சிறந்த வரலாற்று ஆல்பம்:

சிறந்த வரலாற்று ஆல்பமாக வில்கோ – யாங்கி ஹோட்டல் ஃபாக்ஸ்ட்ராட் (20வது ஆண்டு சூப்பர் டீலக்ஸ் பதிப்பு) (Wilco – Yankee Hotel Foxtrot (20th Anniversary Super Deluxe Edition) தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிறந்த பாடலாசிரியர்:

ஆண்டின் சிறந்த பாடலாசிரியர், (Songwriter of the Year, Non-Classical)) டோபியாஸ் ஜெஸ்ஸோ (Tobias Jesso Jr) ஜூனியர் வென்றார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

10 minutes ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

36 minutes ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

20 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

20 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

21 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

22 hours ago