அமெரிக்கா: கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ‘Crypto.com’ அரங்கத்தில் 66வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில், ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இந்தியா சார்பில் கிராமி விருதுகள் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தி ரெக்கார்டிங் அகாடமியின் உறுப்பினர்களால் அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான சிறந்த பாடல் பதிவுகள், இசையமைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், “சிறந்த உலகளாவிய இசை ஆல்பம்” என்ற பிரிவில் கிராமி விருதை இந்தியா சார்பில் ஃபியூஷன் இசைக்குழுவான சக்தி குழு வென்றது. அதன்படி, சாகீர் ஹுசைன், ஷங்கர் மகாதேவன், செல்வகணேஷ் கிராமி விருது வென்றுள்ளனார்.
தற்பொழுது, இந்தியா சார்பில் கிராமி விருதை வென்றுள்ள சங்கர் மகாதேவனின் சக்தி இசைக்குழுவிற்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் தள பக்கத்தின் வாழ்த்து குறிப்பில், “இந்தியாவுக்கு கிராமிகள் மழை பெய்து கொண்டிருக்கிறது என்றும், விருதுகளை குவித்து சாகீர் ஹுசைன், ஷங்கர் மகாதேவன், செல்வகணேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் எட்டு பாடல்கள் கொண்ட தொகுப்பாக சக்தி ஆல்பம் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஜான் மெக்லாலின் (கிட்டார், கிட்டார் சின்த்), ஜாகிர் ஹுசைன் (தபேலா), ஷங்கர் மகாதேவன் (பாடகர்), வி செல்வகணேஷ் (தாளக்கலைஞர்), மற்றும் கணேஷ் ராஜகோபாலன் (வயலின் கலைஞர்) உள்ளிட்டோர் இணைந்து இந்த ஆல்பத்தை உருவாக்கிள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…