கிராமி விருது வென்ற சக்தி இசைக்குழுவுக்கு ஏ. ஆர். ரகுமான் வாழ்த்து.!

Grammy Awards 2024 - AR Rahman

அமெரிக்கா: கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ‘Crypto.com’ அரங்கத்தில் 66வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில், ஆஸ்கர்  நாயகன் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இந்தியா சார்பில் கிராமி விருதுகள் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தி ரெக்கார்டிங் அகாடமியின் உறுப்பினர்களால் அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான சிறந்த பாடல் பதிவுகள், இசையமைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், “சிறந்த உலகளாவிய இசை ஆல்பம்” என்ற பிரிவில் கிராமி விருதை இந்தியா சார்பில் ஃபியூஷன் இசைக்குழுவான சக்தி குழு வென்றது. அதன்படி, சாகீர் ஹுசைன், ஷங்கர் மகாதேவன், செல்வகணேஷ் கிராமி விருது வென்றுள்ளனார்.

தற்பொழுது, இந்தியா சார்பில் கிராமி விருதை வென்றுள்ள சங்கர் மகாதேவனின் சக்தி இசைக்குழுவிற்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் தள பக்கத்தின் வாழ்த்து குறிப்பில், “இந்தியாவுக்கு கிராமிகள் மழை பெய்து கொண்டிருக்கிறது என்றும், விருதுகளை குவித்து சாகீர் ஹுசைன், ஷங்கர் மகாதேவன், செல்வகணேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் எட்டு பாடல்கள் கொண்ட தொகுப்பாக சக்தி ஆல்பம் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஜான் மெக்லாலின் (கிட்டார், கிட்டார் சின்த்), ஜாகிர் ஹுசைன் (தபேலா), ஷங்கர் மகாதேவன் (பாடகர்), வி செல்வகணேஷ் (தாளக்கலைஞர்), மற்றும் கணேஷ் ராஜகோபாலன் (வயலின் கலைஞர்) உள்ளிட்டோர் இணைந்து இந்த ஆல்பத்தை உருவாக்கிள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்