இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது.!
இசைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருதை இந்தியாவின் ஷக்தி ஆல்பம் வென்றுள்ளது.
அமெரிக்கா: கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ‘Crypto.com’ அரங்கத்தில் 66வது ஆண்டு கிராமி விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. தி ரெக்கார்டிங் அகாடமியின் உறுப்பினர்களால் அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான சிறந்த பதிவுகள், இசையமைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெவர் நோவா தொகுத்து வழங்கிய இந்த விழாவில், இந்திய இசைக்கலைஞர்களான ஷங்கர் மகாதேவன் மற்றும் ஜாகிர் ஹுசைனின் ஃபியூஷன் இசைக்குழுவான சக்தி குழு “சிறந்த உலகளாவிய இசை ஆல்பம்” என்ற கிராமி விருதை வென்றுள்ளது. அவர்களின் சமீபத்திய ஆல்பமான (This Moment) ‘திஸ் மொமென்ட்’-க்கு இந்த விருது கிடைத்தது.
ஓடிடியில் வெளியாகிறது ‘குண்டூர் காரம்’ திரைப்படம்.!
மொத்தம் எட்டு பாடல்கள் கொண்ட தொகுப்பாக சக்தி ஆல்பம் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஜான் மெக்லாலின் (கிட்டார், கிட்டார் சின்த்), ஜாகிர் ஹுசைன் (தபேலா), ஷங்கர் மகாதேவன் (பாடகர்), வி செல்வகணேஷ் (தாளக்கலைஞர்), மற்றும் கணேஷ் ராஜகோபாலன் (வயலின் கலைஞர்) உள்ளிட்டோர் இணைந்து இந்த ஆல்பத்தை உருவாக்கிள்ளனர்.