மீண்டும் இணைகிறதா மெகா ஹிட் கூட்டணி?! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!
தனது தனித்துவமான கதைகளத்தால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளியானமின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தான்டி வருவாயா என பல படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இவர் சூர்யாவை வைத்து இயக்கிய காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆதலால் இவர்கள் எப்போது மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இவர்கள் மீண்டும் இணைய வாய்ப்புல்லதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கோலிவுட்டில் செய்தி பரவி வருகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை சூர்யா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
DINASUVADU