தடுமாறிய கார்..விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்திற்கு என்னாச்சு?
ஐரோப்பிய கார் பந்தயத்தில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் கார் பந்தயங்களிலும் ஈடுபட்டு வருகிறார். கார் பந்தயத்தில் ஈடுபட்ட அவர் அடிக்கடி விபத்தில் சிக்குவதும் உண்டு. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இந்தப் பயிற்சியின்போது, அவர் ஓட்டிச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பாதையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பணையில் மோதியது. அவருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டது. அவருடைய கார் இரண்டு முறை சுழன்று விழுந்ததை பார்த்து ரசிகர்கள் பதறிப்போனார்கள் என்று தான் சொல்லவேண்டும்.
அந்த விபத்தை தொடர்ந்து தற்போது ஐரோப்பிய கார் பந்தயத்தில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமார் மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் பங்கேற்க ஐரோப்பாவிற்கு பயணம் செய்திருக்கிறார். இந்த பந்தயத்தில் பங்கேற்றபோது தான் நடிகர் அஜித் மற்றொரு விபத்தில் சிக்கினார். இந்த விபத்து குறித்து வெளியான தகவல்களின்படி, அவருக்கு பெரிய அளவிலான காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், விபத்துக்குப் பிறகு அவர் நொண்டி நொண்டி நடந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்தக் காட்சிகள் அவரது ரசிகர்களிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தின. ஆனால், அஜித் இந்த விபத்திலும் உயிர் தப்பியதாகவும், பெரிய காயங்கள் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் கவனமாக இருங்கள் ak என தெரிவித்து வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025