1000 கோடி வசூலை நெருங்கும் புஷ்பா 2! பலே திட்டம் போடும் இயக்குநர் சுகுமார்?

புஷ்பா 2 படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 900 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

pushpa 2 Sukumar

சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் ஒரு படங்கள் ஹிட் ஆகிறது என்றால் அதனுடைய அடுத்த பாகங்களையும் அதனுடைய இயக்குநர்கள் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஒரு சில படங்களின் இரண்டாவது பாகம் வெளியாகி ஒரு சில படங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஒரு சில படங்கள் பெரிய அளவில் வெற்றிபெற்று இருக்கிறது.

அப்படி தான் புஷ்பா 2 திரைப்படம் இந்திய சினிமாவையே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரமாண்டமான வெற்றியை பதிவு செய்துள்ளது. வெளியான முதல் நாளிலே உலகம் முழுவதும் ரூ.291 கோடி வசூல் செய்து புஷ்பானா ஃபிளவருனு நினைத்தீர்களா ஃ பயர் என்கிற அளவுக்கு மிரட்டலான வசூல் சாதனை படைத்தது. அது மட்டுமின்றி, வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 829 கோடிகள் வரை வசூல் செய்து இந்திய சினிமாவில் விரைவாக 800 கோடிகள் கடந்த படம் என்ற சாதனையையும் படைத்தது.

நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்து வருவதன் காரணமாக படம் மொத்தமாக ரூ.1500 கோடிகள் வரை வசூல் செய்யும் என தயாரிப்பாளர்கள் கணித்துள்ளனர். மொத்தமாக 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலே பட்ஜெட்டை மீட்டு லாபத்தை கொடுத்த காரணத்தால் புஷ்பா 3 படத்திற்கான வேலைகளையும் இயக்குநர் சுகுமார் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, புஷ்பா 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 3-வது பாகம் வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எப்போது வெளியாகும் என்பதற்கான விவரம் அறிவிக்கப்படவில்லை. எனவே, புஷ்பா 2 படம் பார்த்த பலரும் புஷ்பா 3 படம் எப்போது வெளியாகும் என ரிலீஸ் தேதி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனைத்தொடர்ந்து புஷ்பா 3 வெளியாக 2028-ஆம் ஆண்டு ஆகும் எனவும் தகவல்கள் வெளியானது.

இந்த சூழலில், தற்போது புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், புஷ்பா 2 வுக்கு இப்போது அமோகமான வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த சமயத்தில் புஷ்பா 3 பற்றிய அப்டேட்டுகளை தொடர்ச்சியாக கொடுத்தால் அந்த படத்திற்கும் ஒரு பெரிய ப்ரோமோஷனாக இருக்கும் என யோசித்துள்ளாராம். எனவே, விரைவில் புஷ்பா 3 பற்றிய அப்டேட்டை வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், புஷ்பா 2 திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 900 கோடி வசூலை கடந்துள்ள நிலையில், விரைவில் 1000 கோடி வசூலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்