ஹீரோக்களாக களமிறங்கும் ‘பரிதாபங்கள்’ கோபி சுதாகர்.! பூஜையுடன் தொடங்கிய புது பட படப்பிடிப்பு.!
யூடியூப்பில் “பரிதாபங்கள்” எனும் பெயரில் சேனல் ஒன்றை தொடங்கி அனைவரும் ரசிக்கும் படியான காமெடியான வீடியோக்களை செய்து வெளியீட்டு பிரபலமானவர்கள் கோபி, சுதாகர். யூடியூப்பில் இவர்களுடைய சேனலை 4.33 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
மக்களுக்கு மத்தியில் இவர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இருவரும் சேர்ந்து ஒரு படம் ஒன்றில் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளார்கள். அந்த திரைப்படத்தை விஸ்ணு விஜயன் என்பவர் இயக்கவுள்ளதாகவும், படத்தை பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்டுள்ளது.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது. அதற்கான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த பலரும் கோபி, சுதாகர்க்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Parithabangal Gopi & Sudhakar ‘s New Movie Started With A Pooja Today pic.twitter.com/qfvVKMW4aT
— CineBloopers (@CineBloopers) January 23, 2023
மேலும் இதற்கு முன்பே கோபி, சுதாகர் இருவரும் இணைந்து தங்களுடைய பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பிலே “ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ யா ” என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் பரவி வந்த காலத்தில் இந்த படம் எடுக்கப்பட்டு வந்ததால் சில காரணங்கள் அப்டியே நிறுத்துவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்து வேறொரு படத்தில் நடிக்கவுள்ளனர்.