சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! தர்பார் அப்டேட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், தர்பார் படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
#Darbar #update #July25th-6:00pm
— A.R.Murugadoss (@ARMurugadoss) July 25, 2019