மாஸ்டர் சாதனையை மர்டர் செய்த குட் பேட் அக்லி! அடுத்த சம்பவம் லோடிங் மாமே…
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு…கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும் அளவுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். அஜித்திற்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்த படங்களான தீனா, வாலி, வேதாளம், பில்லா ஆகிய படங்களில் என்ன கெட்டப்களில் அஜித் இருந்தாரோ அதனை அப்படியே மாற்றியமைத்து பல லுக்குகளை ஆதிக் ரவிசந்திரன் பயன்படுத்தி இருக்கிறார்.
வழக்கமாக ஒரு படத்தின் டீசர் வெளியாகிவிட்டது என்றாலே இந்த படத்தின் கதை இப்படி தான் இருக்கப்போகிறது என்பதை கணித்து பேச தொடங்கிவிடுவார்கள். ஆனால், குட் பேட் அக்லி டீசரை பார்த்த பலருக்கும் இன்னும் இது எந்த மாதிரி படமாக இருக்க போகிறது? படத்தில் என்னென்ன சர்ப்ரைஸ் இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. அந்த அளவுக்கு சிறப்பான டீசரை படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் கொடுத்திருக்கிறார்.
படத்தின் டீசர் நேற்று வெளியானதில் இருந்து எங்கு பார்த்தாலும் டீசரை பற்றி தான் பேசி வருகிறார்கள். டீசரும் வெளியான 24 மணி நேரம் அதாவது 1 நாளில் சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. அது என்ன சாதனை என்றால் தமிழ் சினிமாவில் வெளியான டீசரில் வெளியான 24 மணி நேரத்தில் அதிகம் பார்வையாளர்களை கடந்த டீசர் என்ற சாதனையை படைத்துள்ளது. வெளியான 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்த சாதனையை படைத்திருக்கிறது.
இதற்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்த சாதனையை படைத்திருந்தது. அதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான டீசர் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தது. தற்போது இந்த இரண்டு படங்களின் சாதனைகளையும் நொறுக்கி குட் பேட் அக்லி புது சாதனையை படைத்திருக்கிறது.
மேலும், இந்த படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில், முதற்க்ட்டமாக டீசர் வெளியிடப்பட்டு சாதனை படைத்த நிலையில், விரைவில் டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.