குட் பேட் அக்லி ஷூட்டிங் ஓவர்? பொங்கலுக்கு AK என்ட்ரி கன்பார்ம்!
குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அனிருத் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆனால், அந்த படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிப்பவர்கள் அறிவிக்கப்பட்டதோடு சரி அதன்பிறகு படம் நடக்கிறது அல்லது இல்லையா? எப்போது ரிலீஸ் என ஒரு தகவலும் வெளிவந்த பாடு இல்லை. இதனாலே பல அஜித் ரசிகர்கள் வலிமை கதை ஆகிவிட்டதே நம்மளுடைய நிலைமை என புலம்பி வருகிறார்கள்.
அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக அஜித் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நடித்து வரும் குட் பேட் அக்லி குறித்த தகவல் அப்டேட்டுகளாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. குறிப்பாக, படம் அறிவிக்கும்போதே நாங்கள் 2025-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவோம் என திட்டவட்டமாகவே அறிவித்து ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தி இருந்தார்கள்.
எனவே, அஜித் ரசிகர்கள் விடாமுயற்சியை விடுங்க இனிமே குட் பேட் அக்லி படத்தில் மட்டும் தான் என முடிவெடுத்து அந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகளை வைக்க தொடங்கிவிட்டார்கள். இந்த சூழலில், அவர்களுடைய எதிர்பார்ப்பை இன்னும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில், படம் குறித்த இரண்டு விஷயங்கள் வெளிவந்து இருக்கிறது.
அது என்னவென்றால், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ளதாம். ஆனால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாத காரணத்தால் விடாமுயற்சி படத்திற்கு முன்னதாகவே அதாவது பொங்கலுக்கு குட் பேட் அக்லியை கொண்டு வருவதற்கு அஜித் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். எனவே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதைப்போல, மற்றோரு இனிப்பு செய்தியாக குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, குட் பேட் அக்லி முதல் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அந்த பாடல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025