தொய்வில் கிடைக்கும் ‘விடாமுயற்சி’.. தேதியை குறித்த ‘குட் பேட் அக்லி’.!
விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், 'குட் பேட் அக்லி' திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.
![Vidamuyarchi Good Bad Ugly_11zon](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/09/Vidamuyarchi-Good-Bad-Ugly_11zon.webp)
சென்னை : இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும், அர்ஜுன், ரெஜினா, ஆரவ், திரிஷா போன்ற பல பிரபலங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து, படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால், படக்குழு ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. அதில் இன்னும் தொய்வு இருந்து வருகிறது.
இதனிடையே, அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், கடந்த சில தினங்களாகவே ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கல் தினத்தை ரிலீஸ்-ஐ முன்னிட்டு வெளியாகாது எனவும் 2025 மே மாதத்தில்தான் வெளியாகும் எனவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இன்று படக்குழுவினர் ஆதிக் ரவிச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, மீண்டும் படம் 2025 பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதை உறுதி செய்துள்ளனர்.
Team #GoodBadUgly wishes the young and exciting director @Adhikravi a very Happy Birthday ❤????
He will serve VERA LEVEL entertainment on big screens in Pongal 2025 ????
#AjithKumar @MythriOfficial @suneeltollywood @AbinandhanR @ThisIsDSP @editorvijay… pic.twitter.com/Sjcb4EssCW— Mythri Movie Makers (@MythriOfficial) September 17, 2024
விடாமுயற்சி டீசர்
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் புதிய தகவலுக்காக ரசிகர்கள் காத்திருந்த போது, அடுத்த வாரம் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்ற தகவல் பரவி வருகிறது. இப்படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களை இத்தகவல் உற்சாகம் அடையச் செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : தைப்பூச திருவிழா முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
February 11, 2025![Today Live 11 02 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Today-Live-11-02-2025.webp)
AI உச்சி மாநாட்டுக்கு முன் பிரமாண்ட விருந்து…மாக்ரோன், ஜேடி வான்ஸை சந்தித்த பிரதமர் மோடி !
February 11, 2025![PM Modi Meets Macron, JD Vance](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/PM-Modi-Meets-Macron-JD-Vance.webp)
கருடனை விட கவிழ்ந்த விடாமுயற்சி! அஜித் படத்திற்கு இந்த நிலைமையா?
February 11, 2025![garudan vs vidaamuyarchi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/garudan-vs-vidaamuyarchi.webp)
INDvENG : டேஞ்சரில் சச்சின் சாதனை! முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?
February 11, 2025![rohit sharma sachin tendulkar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-sachin-tendulkar.webp)