விருதுகளை வாரிக் குவித்த "தி ஷேப் ஆப் வாட்டர்!7 கோல்டன் குளோப் விருது…….
அமெரிக்காவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்காக ஆண்டுதோறும் கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆஸ்கர் விருதிற்கு இணையாக கருதப்படும் இந்த விருதினை பெறுவது ஹாலிவுட் திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான 75-வது கோல்டன் க்ளோப் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி ஏராளமான ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகர்கள் கருப்பு நிற உடையில் அங்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு இயக்குநர் கில்லர்மோ இயக்கத்தில் உருவாகிய “தி ஷேப் ஆப் வாட்டர்” (The Shape of Water) திரைப்படம் 7 விருதுகளை வென்றது. அதே போல் புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க்கின் படமான “தி போஸ்ட்” (The Post) திரைப்படம் 6 விருதுகளை பெற்றது. நடிகர் ஜேம்ஸ் ஃபிராங்கோவிற்கு சிறந்த நடிகருக்கான விருது அளிக்கப்பட்டது.
source: dinasuvadu.com