முற்றுப்புள்ளி வைக்க கடவுள் இருக்காரு! சிவகார்த்திகேயன் குறித்த கேள்விக்கு டி.இமான் பதில்?

sivakarthikeyan and d imman

சிவகார்த்திகேயனுடன் என்ன பிரச்சனை என்ற கேள்விக்கு இசையமைப்பாளர் டி.இமான் பதில் அளித்துள்ளார். 

சிவகார்த்திகேயன் துரோகம் ?

இசையமைப்பாளர் டி.இமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு சொல்ல முடியாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் எனவும், இனிமேல் இந்த ஜென்மத்தில் அவருடன் படங்களுக்கு இசையமைக்கவே மட்டேன் எனவும் தெரிவித்து இருந்தார். இவர் இப்படி பேசியது பெரிய அளவில் சிவகார்த்திகேயன் அப்படி என்ன செய்தார் என்கிற அளவுக்கு கேள்வி எழும்பி தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.

ஆதரவாக வந்த முதல் மனைவி

இமான் இப்படி பேசியதற்கு அடுத்த சில மணி நேரத்திலே இமான் சொல்வது மிகவும் பொய் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சிவகார்த்திகேயனை பற்றி பேசுகிறார். சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதர் எனவும் நானும் இமானும் பிரியவே கூடாது என சிவகர்த்துகேயன் விரும்பியதாகவும் அவருக்கு ஆதரவாக இமானின் முதல் மனைவி மோனிகா தெரிவித்திருந்தார்.

என்ன பிரச்னை

இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமல் சினிமா வட்டாரத்தில் இந்த செய்தி விடை தெரியாத புதிராக பேசப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் இதை பற்றி பேசினால் மட்டுமே உண்மை என்னவென்று தெரிய வரும் எனவும் அல்லது இமான் இந்த பிரச்சனை பற்றி பேசினால் மட்டுமே இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இமான் பதில்

இதற்கிடையில், சமீபத்தில் இமான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது இமானிடம் சிவகார்த்திகேயனுடனான பிரச்சனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த இமான் ” இந்த விஷயத்தில் முற்றுப்புள்ளி வைக்க ஒன்றும் இல்லை. இறைவன் இருக்கிறான்.. அவன் முற்றுப்புள்ளி வைப்பான் என்ற நம்பிக்கை இருக்கிறது” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்