கோயிலுக்கு இவர்கள்தான் வரணும் என்று கடவுள் எந்த சட்டமும் வகுக்கவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்.!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துமுடித்துள்ள “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ள நிலையில். படத்திற்கான முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகள் கேட்டனர், அதற்கு அவரும் பதில் அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ” கிராமம், நகரம் என சமூகத்தின் எல்லா இடங்களிலும் ஆணாதிக்கம் நிறைந்திருக்கிறது. கடவுளை பொறுத்தவரை ஆண், பெண் என்ற வித்தியாசம் எதுவும் இல்லை. எந்த கடவுளும், இவர்கள்தான் கோயிலுக்கு வர வேண்டும் என எந்த சட்டமும் வகுக்கவில்லை. இது எல்லாம் நாமே உருவாக்கி கொண்ட சட்டம் தான்.
இதை சாப்பிடக்கூடாது, இதை தான் சாப்பிட வேண்டும் இது தீட்டு என எந்தக் கடவுளும் சொல்லவில்லை, இதையெல்லாம் நாம் தான் உருவாக்கி நடைமுறை தான். சபரிமலை மட்டும் இல்லை, எந்த கோயிலிலும் எந்த கடவுளும் இவர்கள்தான் கோயிலுக்கு வர வேண்டும் என்று எந்த சட்டமும் வகுக்கவில்லை ” என பேசியுள்ளார்.